பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


நடத்துகிறேன். இன்னிக்கு லாப நஷ்டக் க ண க் கு ப் போடனும் இல்லியா? " என்ருர், "ஆமாங்க ஸார் ! “ என்று ஆமோதித்தான் சிறுவன். பிறகு, தயக்கத்தோடு ஆசிரியரை விழித்துப் பார்த்தான். * ஸார் நம்ப க்ளாஸ் பசங்க எல்லோருமே ஒட்டுக்கச் சொல்லிட்டாங்க. உங்க பேணுவை எடுக்கலேன்னு ; பின்னே உங்க பார்க்கள் வென் எப்படித்தான் மறைஞ்சதோ, மர்ம மாய்த்தான் இருக்குது .ஒரு வேளை, நீங்க ஞாபகமறதியாய் உங்க பேணுவை வேறே எங்கானும் ஏமாந்திருக்கவும் வழி இருக்கலாமில்லையா, லார் ?' என்று ஒரு கேள்வியைக் கனே தொடுத்தான் பாபு. வாத்தியாருக்கு உடம்பு உதறத் தொடங்கியது. அந்தி வாடை இப்படியா அடிக்க வேண்டும்? " எனக்குத் துல்லியமாக நினைப்பு இருக்குப்பா. என் ளுேட புது ஜப்பான் பார்க்கரை என் மேஜை மேலேதான் வச்சிருந்தேன். வேறே எங்கேயும் ஏமாந்திடல்லே, பாபு !’ " அப்படியானல், க்ளாஸ் முடிஞ்சதும் சாடாபேரையும் நீங்களே சோதிச்சுப் போடுங்க லார் 1’ என்ருன் பாபு. இமைகள் அழகாகப் படபடத்தன. ' வெரிகுட் ! நானும் அப்படித்தான் யோசிச்சேன். பேணு கிடக்கட்டும் ஐம்பது ரூபாய்தான். ஆணு, சத்தியம் விலை மதிப்பில்லாதது அல்லவா ? இந்த வகுப்பிலே எல்லா ரையும் சோதனை போட்டால்தான், யார் பொய்யாளி என் கிற ரகசியம் புரிய முடியும் ...அப்பத்தான் எனக்கும் மனசு ஆறும் ' என்ருர் வாத்தியார். சாக்பிஸ் சுழலத் தொடங்கி வட்டது, அதோ ! சோதனை முடிந்தது. சத்தியச் சோதனை அல்லவா அது ? பாவம், ஆசிரியர் வேலாயுதத்தின் அன்பு முகம் ஏன் அப்படிச் சலனம் அடைந்து விட்டதாம் ?