பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 . . இன்று நேற்று வந்த சொந்தமா? $ துTத்துக்குடி எக்ஸ்பிரஸ், எழும்பூர் ரெயில் நிலையத் தில் வந்து ஒய்வு பெற்றது தான் தாமதம் ; கையில் பிடித் திருந்த தோல் பெட்டியுடன் கீழே இறங்கின்ை தங்கப்பன் பெட்டியைத் தரையில் வைத்தான். ரெயில் பெட்டி யினின்றும் கீழே இறங்க வழிபார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய அன்னையைக் கைகளைத் பற்றிய வண்ணம் கீழ்த் தளத்திற்குப் பதமாகச் கொண்டு வந்து சேர்த்தான் அவன் சாமான்களுக்குத் தாயைக் காவல் வைத்தான் ; வாட கைக்காருக்கு வகை செய்யலாஞன். ஜார்ஜ் டவுனில் ராமசாமித் தெருவுக்கு வந்ததும் தான், தங்கப்பனுக்கு நல்ல மூச்சுப் பிரிந்தது. வாடகைப் பணத்தை மீட்டர் பார்த்து நீட்டினன். பிறகு பெட்டியும் கையுமாக, தாயுடன் வீட்டினுள் நுழைந்தான் அவன். வீடு என்ருல் வாடகை வீடு! ' என்ன அம்மா, பெண் பார்க்கப்போன காரியம் சித்திதானே?...” என்று வினவினர் குடித்தனக்காரர்கள் சிலர். ம் ' என்று வெய்துயிர்ப்பைப் பதிலாக்கிச் சுளித்துக் கொண்டே, வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்ருள் மரகதத்தம்மாள் " தம்பி, நீ போய்க் குளிச்சிட்டு ஒடியாப்பா