பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80


தங்கப்பன் குளித்துத் திரும்பினன். பக்கத்து வீட்டுப் பையன் டிபன் வாங்கி வந்தான். புதுத் துணிமணிகள் வேண்டுமல்லவா ? எனவே, சாவிச் கொத்தை எடுத்து, ஒரு சாவியை விலக்கி, அந்தத் தோல் பெட்டியைத் திறந்தான். ஒருகணம், தங்கப்பன் சிலையானன் ! " தோல் பெட்டி மாறியிடுச்சு அம்மா வேறே யாரு டைய பெட்டியோ நமக்கு வந்திருச்சுது : ' என்ருன் அவன். இந்தப் பெட்டி, அவனுடைய சொந்தப் பெட்டி மாதிரியே தான் காட்சி கொடுத்தது : அட கடவுளே ! என்று பெரு மூச்செறிந்தான் தங்கப்பன். அந்தத் தோல் பெட்டியைப் பிரிக்கப் பிரிக்க, அவனுக் கெனக் காத்துக் கொண்டிருந்தவை போல அதிசயங்கள் ஒன்று, இரண்டென்று விளைந்து கொண்டிருந்தன. நவ நவமான நாகரிக உடுப்புக்கள் தனியே ஒதுங்கிக் கொண்டன; பிரிந்து கிடந்த அந் நாட்குறிப்பை மீண்டும் பார்த்தான். படித்தான். - - பேரழகி சாந்தினி எனக்குக் கிடைப்பதற்கு நான் பெரும் பாக்கியம் செய்திருக்கத்தான் வேண்டும். அப்பா எனக்கெனச் சேமித்திருக்கும் நிதியும், விதி எனக் காக வகுத்துத் தந்து விட்டிருக்கும் நீதியும் என் னுடைய எதிர்காலத்துக்குரிய நற் சகுனங்கள் 1 ஆம் , உண்மைதான். புத்தாண்டு பிறந்து, சித்திரை மாதம் முடிவதற்குள் என் வாழ்க்கைப் புத்தகத்தில் புத்தேடு புரண்டு விடும் ' டைரியை வீசியெறிந்தான் அவன். கனவும் நனவும் கலந்தன ; இதயம் கொப்புளித்த நீருக்கு வழியா இந்த விழிகள் ? சாந்தினி தங்கப்பன் ஒருமுறை தனக்குத் தானே அப்பெயரைச் சொல்லிக் கொண்டான்; இன் மழலைப் பைங்கிளிக்கு ஒவ்