பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82


அணைச்சுப்படும், தம்பி ...மலைக் கோட்டைப் பிள்ளையாரும் நம்ம பிரஹதம்பாள் அம்மனும் நல்ல முடிவைக் காட்டாம இருக்க மாட்டாங்க. சரி, நீ இப்ப பலகாரத்தை சாப்பிட்டுப்பிட்டு, வேலைக்குப் புறப்பட்டுப்போ. இந்தச் சனியனை மூடிப்பிட்டு எழுந்திரு ' தங்கப்பனின் கையில் முகவரிச் சீட்டு ஒன்று தட்டுப் பட்டது. எம். நாகநாதன் என்ற பெயருக்கு அடியில் அலு வலகம், விடு ஆகிய இரண்டின் முகவரிகளும் அச்சடிக்கப் பெற்றிருந்தன. கண்களைத் துடைத்த வண்ணம், கை மாறிய அந்தப் பெட்டியை மறுபடியும் துழாவிய வேளை யில், புதியதொரு நிழற்படம் ஒன்று அவனுக்குரிய கைவிரல் களில் சிக்கியது. விலாசினி அல்லவா இவள் ? இவளுடைய படம் இவன் பெட்டியில் எப்படி வந்தது. ? ? 蟒 憑 肇 சிந்தாதிரிப்பேட்டையில் பஸ்ஸிலிருந்து இறங்கினன் தங்கப்பன். அவனுடைய கையில் அந்தத் தோற்பெட்டி இருந்தது. சைக்கிள் ரிக்ஷா ஒன்றை அமர்த்திச் சென்று கொண்டிருந்தான் அவன். குறுக்கோடிய தெருக்களை யெல்லாம் காலால் ஏற்றிவிட்டு சைக்கிள் ரிக்ஷாக்காரன் பறந்தான். ஆனல் தங்கப்பனுக்கோ தன் வழியில் குறுக் கிட்டுப்பாய்ந்த நினைவுகளை சற்றே விலகியிரும் , பிள்ளாய்!” என்று பணித்து, அல்லது வேண்டி, வழி விலக்கிச் செல்லும் மார்க்கம்,புலன்களில் ஒட்டவில்லை ! - சாந்தினி தங்கப்பன் ஏன் அவளை அழைத்தான்? மலைக்கோட்டைப் பதுமையை அவன் ஏன் கூவிக் கூப்பிட வேண்டும்? அவன் என்ன செய்வான்? பாவம், காலமும் கனவும் அவனுக்கு விடுகதைகள் போட்டு விட்டனவே ? நான் என்ன செய்யட்டும் அக்கா ? நம்ம சாந்தியை நம்ம தங்கப்பனுக்குக் கொடுக்கவேணும்னுதான் நினைச்சுக்