பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83


கிட்டிருந்தேன்; ஆல்ை, லவிதம் வேறு - மாதிரியாக விதித்து விட்டதே ? சாந்தினி தங்கப்பன் ஜாதகங்கள் சரிவரப் பொருந்தவில்லை, அக்கா ! " - . கண்ட கனவுக்கும் கொண்ட நினைவுக்கும் வெற்றி முத்திரை பதித்துத் திரும்பிவிட வேண்டும் என்று தங் கப்பனும் அவனைப் பெற்ற மாதாவும் துரத்துக்குடி எக்ஸ் பிரஸ் வண்டியில் பயணமானர்கள். ஆளுல், அதே துரத்துக்குடி எக்ஸ்பிரஸ் அவர்கள் இருவரையும் சுமந்து திரும்புகையில், இடிந்த மனக் கோட்டைகளின் துகள்கள் மாத்திரமே எஞ்சிக் கிடந்தன. கனவு ராஜ்யத்தின் நுழை வாயிலைத் தரைமட்டமாக்கிவிட்ட அந்த இனம் புரியாக் செயலுக்குப் பெயர் தான விதி ? . அன்று புதுக்கோட்டை தனியரசாக இயங்கியது. தங் கப்பன் பிறந்தான். அவனுக்குச் சொந்த மாமன் மகள் சாந்தினி. மரகதத்தம்மாளின் உடன் பிறந்த தம்பி சோமசேகரன் திருச்சியில் வசதி யுடன் திகழ்ந்தார். என்ருலும், தங்கப்பனின் கல்லூரிப் படிப்பு சென்னையிலேயே தொடர்ந்தது ; எம். ஏ. படிப்பு ; பொருளாதாரப் பிரிவு : வெற்றி பெற்ற இனிப்புச் சேதியை மட்டிலுமே அவனது தந்தை அனுபவிக்கக் கொடுத்து வைத்தார். தனியார் நடத்திய கல்லூரியில் லெக்ச்சரர் ஆளுன் தங்கப்பன். இருநூற்றைம்பது ரூபாய்ச் சம்பளம் : பாங்கில் தந்தை சேமித்துச் சென்ற பணம் பத்தாயிரம். பட்டன வாழ்வு இதுவரை அவனுக்குச் சோதனைகள் தரவில்லை; ஆளுல் இப் போது, அவனைச் சோதித்து விட்டது; ஏன், அவனே சோதனைப் பொருளானன் ! மனம் ஒரு போட்டோ ஆல்பம். தானும் சாந்தினியும் பிஞ்சுப்பிராயம் தொட்டு, இதயம் தொட்டு உறவாடி மகிழ்ந்த இனிய நாட்களை அவனது மனம் காமிரா வாகிப் படமெடுத்தது. ஆல்ை அதே நிகழ்ச்சிகள் இன்றைக்குப் படமெடுத்து ஆடும் பாம்புகளாகி விட்டனவே? உம்மைப் பெருவினை யும் ஒர் அரவமோ ? .