பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த இருபத்திரண்டாவது கதைப் பூங்கொத்தையும் வெளிக் கொணர்ந்திருக்கின்ருர் i-நியாயமான அந்த அன்பை நேர்மையான அந்தரங்க சுத்தியோடு கை தொழக் கடன்பட்டவன் அடியேன் ! விதி யாரை விட்டது ?-ஓர் ஐந்தாண்டுக் காலம் எனக்கும் அஞ்ஞாத வாசம் கிட்டிற்று. அப்போது ஓர் அதி சயத்தை நான் அனுபவ பூர்வமாகக் கேரளத்து மண்ணில் உணர்ந்து, பெருமையும் பெருமிதமும் கொண்டேன். எழுத்துக்காரன் என்ருல், அங்கே ஒரே மரியாதையும் மதிப்பும் !-அந்தப் பாக்கியம், இங்கே நம் அன்புத் தமிழ் எழுத்தாளர்கட்கும் கிட்ட வேண்டாமா ?-உண்மையான இலக்கிய ஆர்வலர்கள் அன்பு கூர்ந்து இது பற்றிச் சற்றே சிந்தியுங்களேன் !... இந் நூலைச் சிறப்புடன் உருவாக்கக் கைகொடுத் தி ஒவியர் கோபன் உள்ளிட்ட அனைவருக்குமே என் அன்பும் நன்றியும் உரியன. வணக்கம். தியாகராய நகர் & கம் 25-6–1978 பூவை எஸ். ஆறுமு