பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94


நினவுதான் அவளுக்கு உயிர். அவள் வாழ்வும் வளமும் தானே உங்கள் மூச்சு ! நீங்கள் அறியாததல்லவே சிதம்பரம், இவையனைத்தையும் கடந்தது கண்ணிருடன் கழிந்தொழியட் டும். உங்கள் மனைவியின் வருங்காலத்தை-நாளைப் பிறக்க விருக்கும் நாளேத் திருநாளாக்குங்கள்...இது உங்கள் கடமை; அக்கினி சாட்சியாக உங்கள் மறுபாதி’க்கு நீங்கள் அளித்த வாக்குறுதியுங்கூட...” என்ருன் ராமனுதன், குரலில் உணர்ச்சி கழித்தோட.

  • ராமனு தன். என் கடமையை நினைவு படுத்துகிறீர்கள், ஆளுல் அவள் கடமை ? கொண்ட கணவனின் கவலையைப் போக்கக் கவலையில்லாமல், வெறும் நகைப் பைத்தியமாக அலைவதுதான ? இப்போது தினத்தால் கூட நெஞ்சு குமுறு கிறது. அப்பொழுது வேலைபார்த்து வந்த கம்பெனியில் நான் பொறுப்பேற்றிருந்த காஷியர் வேலையில் அன்று இருபது ரூபாய் திட்டக் குறைச்சல் ஏற்பட்டது. அடுத்த நாள் ஆடிட்டிங் நடப்பதாக இருந்தது விஷயத்தை ஒரு மட்டாக அவளிடம் சொல்லி அவள் அப்பா செய்துபோட்ட ஒற்றை வடச் சங்கிலியை அடகு வைத் து இருபது ரூபாய் பெற்று கணக்கை நிரவல் செய்து விட்டால் விரைவிலேயே எப்படியும் நகையை மீட்டுத் தருவதாகக் கெஞ்சினேன். அவள் பெண்ணுக இருந்தும் இவ்விஷயத்தில் பேயாளுள், என் வேண்டுகோளையும் மறுத்து விட்டாள். கடைசியில் எப்படியோ ஒருமாதிரி பணத்தைக் கட்டிக் கணக்குப் பார்த்ததில் நான் தான் வரவு செலவுப் புள்ளிகளை மாற்றி எழுதி விட்டது புரிந்தது. அன்று வைத்த வைராக்கியம் இன்றுவரை மாறவில்லை. மாதங்கள் இருபது ஆகின்றன. இனியுமா அவளை அழைத்து நான் வாழ்க்கை தொடங்குவது? என்ன உதாசீனம் செய்தவளின் முகத்தை மீண்டும் நான் திரும்பிப் பார்க்கவா ? ஊஹாம், ஒரு கணம்கூட எண்ண. வம் மனம் ஒப்பவில்லையே அவளைப்பற்றி, மன்னியுங்கள்

நண்பரே. ' கணவன் என்னும் கடமை மறந்து பேசிய சிதம்பரத்தின் வார்த்தைகளுக்கு மீளவும் ராமனுதன் மறுமொழி சொல்லத்