பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

. தொடங்கின்ை, திருமணம் வெறும் ஐந்து நிமிஷச் சடங்கில்லை, அதைப் புரிந்து கொள்ள ஒரு வாழ்க்கை போ தாது, தெரியுமா ? உங்கள் மனத் தி லுள்ள குரோதத்தைஅசட்டுப் பிடிவாதத்தை அலக்காக மூட்டை கட்டி வைத்து விட்டு, உங்கள் துணைவியை மறுவாழ்வு பெறச் செய்யுங்கள். அதுவே உங்கள் கடமை ; அக்கினி சாட்சியாக அவளைக் கைபிடித்த தருணம் நீங்கள் செய்து கொடுத்த வாக்குறுதி ? தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பதுதானே தெய்வீகம்...?’’ விம்மி வந்த கண்ணிர் ராமனதனப் பேசவொட்டாமல் நாவடைக்கச் செய்து விட்டது. சிதம்பரம் ஒரு கணம் அதிர்ச்சி யுற்ருன், ராமனுதனின் கண்கள் சிந்தின நீர்மனிகள் அவனை அப்படிச் செய்தது. தன் விஷயத்தில் அவன் கொண்டுள்ள அன்பும் ஈடுபாடும் அவனைத் தன் நிலைமறக்கச் செய்தன. ராமனுதன், உங்கள் அன்பும் அக்கறையும் மகத் தானது. உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப் பட்டிருக் சிறேன். ரேணுகாவை அழைத்து வரும்படி நாளைக்கே என் மாமசூருக்குக் கடிதம் எழுதிவிடுகிறேன். சரிதானே...? என் கடமையை நினைவுபடுத்தி, உணரச் செய்ததற்கு மிக்க நன்றி...' என்ருன் சிதம்பரம், குனிந்த தலை நிமிர்ந்து. முகத்தில் அன்றுவரை நிலவியிராத அழகான புதுக்களே மெருகு பூசப்பட்டிருந்தது. புது வெள்ளத்தின் மிதப்பும் பூரிப்புமல்லவா அது " ஆஹா ரொம்ப தாங்க்ஸ் மிஸ் - சிதம்பரம் ஒரு பெண்ணின் வாழ்வில் புது மலர்ச்சி தோன்றச் செய்த புண் னியத்தில் அடியேனுக்கும் உள்ள பங்கில் பெருமைப் படு கிறேன்; பெருமிதம் கொள்ளுகிறேன். நம் தோழர் தியாகு வின் திருமண முகூர்த்தத்துக்கு நாம் மூவரும் கட்டாயம் தம்பதி சகிதம் போய் வருவோம். அப்படியென்ருல், நாம் நால்வருமே பெரிய வீடு பிடித்து குடும்பங்களை இங்கேயே செட்டில் செய்து விடுவோமே. ஆனல் நம் அருமை. மெஸ்.