பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96


ஸ்குக்குத்தான் குட்பை போட வேண்டும்......எப்படி ' என்ருன் ராமனதன் பொங்கும் குது கலத்தில். 澄,。 喙 蠟 விடிந்தது. “ இனி நாமெல்லாம் நண்பர் சிதம்பரத்தைத் தரிசிக்கக் கூட முடியாது. அதற்குக்கூட திருமதி சிதம்பரம் அவர் களின் அனுமதி தேவையாக்கும்...... ’ என்று சுலாட்டாக் குரலை முன்னுேட விட்ட வண்ணம் உள்ளே நுழைந்தார்கள் தியாகராஜனும் மாதவனும். அங்கு சிதம்பரம் மட்டுமே இருந்தான். அவர்களை வர வேற்ருன். தன் மனைவியை அழைத்து வந்து விடுமாறு தனது மாமருைக்கு தபால் எழுதிய விபரத்தை நண்பர்களிடம் காட்டி விட்டுத்தான் போஸ்ட் செய்தான் சிதம்பரம் அதற்குத்தான் அவனே நண்பர்கள் உரிமையுடன் கேலி பண்ணிஞர்கள். தங்கள் குழுவில் ராமனாதனைக் காணுத அவர்களுக்குத் திகில் பரவிற்று. அவன் அறையை நாடிச் சென்ருர்கள், மாலையில் சிதம்பரத்தின் புது வாழ்வுக்கு அடித்தளமிட்டுப் பிரிந்தவர்கள் தாம், அப்புறம் ஒருவரை யொருவர் சந்திக்க ராமனுதனின் அறை திறந்தது திறந்தவாறு கிடந்தது. சாமான்களெல்லாம் போட்டது போட்டபடி சிதறிக் கிடந் தன. மூலைக் கொன்ருக. இரவு போடப்பட்ட விளக்குப் போலும், அதுகூட இன்னும் அனேக்கப்படாது எரிந்து கொண்டிருந்தது. சிகரெட் துண்டுகள் பல பல சிதறிக் கிடந்தன. அவர்கள் மூன்று பேரும் ஒருவரை யொருவர் மாறி, மாறிப் பார்த்த வண்ணம் இருந்தார்கள் ; பேசவில்லை. ராமனதன் அறையில் காணப்படாததும், அறையின் அலங். கோலமும் அவர்களுக்கு ஏதோ ஒரு புதிராகத்தான் பட்டது.