பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கால ஆராய்ச்சி சேரமான் பெருமாள் என்று வகுத்துக் கூறும் இந்த ஆசிரியர், சுந்தரரை இப்பிரிவுகளில் சேர்த்துக் கூறத் தவறிவிட்டார்." சுந்தரர், இயல், இசைத்தமிழ் வல்லோர் அல்லரா? நந்தனார் இசைத்தமிழில் வல்லார் என்பதற்குச் சான்று என்னை? 4. இங்ங்னமே, இந்த ஆசிரியர் பாடிய 'திருமுறை கண்ட புராணம் என்ற நூலிலும் சில தவறுகள் உண்டு. அவற்றுள் குறிக்கத்தக்க பெருந்தவறு ஒன்றுண்டு. அஃதாவது, இராசராசன் (கி.பி. 985- 1014) காலத்துத் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி, அவன் மகனான இராசேந்திரன் (கி.பி. 1012-1044) புதிதாக உண்டாக்கிய கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீச்சுரம் பற்றிக் கருவூர்த்தேவர் பாடிய திருவிசைப்பாவை ஒன்பதாம் திருமுறையில் (இராசராசற்கு எதிரில்) சேர்த்தார் என்பது. மகன் தனது ஆட்சிக் காலத்திற் கட்டிய கோவிலைப் பற்றிய பாடல் ஒன்றை, அம்மகனது தந்தை காலத்துப் புலவர் அத் தந்தை முன்னிலையிலேயே, மற்றத் திருமுறைகளை வகுத்த பொழுதே, தொகுத்தார் என்னல் எங்ங்னம் பொருந்தும்? இங்ங்னம் இராசராசன் காலத்தவரும் பிற்பட்டவருமான புலவர் பாக்களையெல்லாம் இராசராசன் காலத்திலேயே நம்பி தொகுத்து முடித்தார் என்று திருமுறை கண்ட புராண ஆசிரியர் தவறாகக் கூறிவிட்டதால்," ஆராய்ச்சியாளர், திருமுறைகள் முதற் குலோத்துங்கன் காலத்தில் தொகுக்கப்பட்டனவாதல் வேண்டும் என்றும் நம்பி திருவிசைப் பாவையும் தொகுத்தார் என்று புராணம் கூறலால், அவர் இராசராசற்குப் பிற்பட்டவர் என்றும் கருதலாயினர். இவற்றின் ஆசிரியர் உமாபதி சிவமா? திருத்தொண்டர் புராண வரலாறும் திருமுறை கண்ட புராணமும் இயற்றியவர் சந்தான ஆசாரியருள் ஒருவரும் சைவசித்தாந்த நூல்கள் பலவற்றின் ஆசிரியருமான கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் என்று சில பதிப்புக்களிற் காண்கின்றன." அவர் பாடியனவாகத் திருத்தொண்டர் புராண சாரம், திருப்பதிகக்கோவை, திருப்பதிக்கோவை என்பனவும் காணப்படுகின்றன. இவற்றுள் முன்னது பெரிய புராணத்தைத் தழுவிச் செய்யப்பட்டதாகும். அதனில், (1) இடங்கழியார் கொடும்பாளுர் வேளிர் குலத்தரசர் என்றும், (2) கழற்சிங்கனும் ஐயடிகள் காடவர்கோனும் பேரரசர் என்றும் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளன." இதனைப் பாடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/147&oldid=793203" இலிருந்து மீள்விக்கப்பட்டது