பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார காலம் 69 8. காவிரி என்னும் பெயரே 'காவேரி என்று சிலப்பதிகாரத்தில் மாறி வழங்கப்பட்டமையே சிலப்பதிகாரம் பிற்பட்டது என்பதை உணர்த்துகிறது. காவிரி பற்றிய புராண கதையும் மணிமேகலையில் காணப்படுகிறது. 9. அகநாநூற்றில் காணப்படும் திருமண முறைக்கும் கோவலன்-கண்ணகி திருமண முறைக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. 10. தொகை நூல்களில் கூத்தர், விறலியர் நடனங்களே கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வந்துள்ள மாதவியின் நடன அரங்கேற்றம் பரத நாட்டியத்தைப் பின்பற்றியது. 11. வரிப்பாட்டு முதலிய பாடல்கள், சிலப்பதிகாரம் தொகை நூல்களுக்குப் பிற்பட்ட வளர்ச்சியை உணர்த்துவனவாகும். 12. பார்ப்பணி கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை பஞ்ச தந்திரத்தைச் சேர்ந்தது. அதனைக் கூறும் சிலப்பதிகாரம் மிகவும் பிற்பட்டதாகும். தடைக்குரிய விடைகள் இனி இத் தடைகள் பொருந்துவனவா என்பதை ஒவ்வொன்றாக எடுத்து இங்கு ஆராய்வோம்: 1. இளங்கோவடிகள் செங்குட்டுவனுக்கு இளவல் என்பதை, இளங்கோ துறவு பூண்ட வரலாற்றை எடுத்துக் கூறித் தெய்வம் விளக்கியதாக இளங்கோவடிகளே மிகத் தெளிவாக வரந்தரு காதையில் பன்னிரண்டு வரிகளில் (171-183) கூறியுள்ளார். இந்நிலையில் மணிமேகலையின் சான்றோ பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தின் சான்றோ இதற்குத் தேவையில்லையே! மணிமேகலையிலோ ஐந்தாம் பத்திலோ இந்த உறவு முறையைக் கூறத்தக்க வாய்ப்பும் இல்லையே! 2. செங்குட்டுவன் இயற்றிய பத்தினி விழாவை முதன்முதல் எடுத்துக் கூறிய இளங்கோவடிகள் அதற்கு வந்திருந்த மாளுவ வேந்தரையும் கயவாகுவையும் குறிப்பிட்டார். இம்மாதிரியே மணிமேகலையிலும் குறிக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தல் உண்டா? அங்ங்ணம் குறிக்கப்படாமையால் இஃது ஏற்றுக்கொள்ளத் தக்கது அன்று என்று கூறுவது பொருத்தமாகுமா? இலங்கை வரலாற்று நூல்களுள் காலத்தால் முற்பட்ட மகாவம்சத்தில் கயவாகு பத்தினி விழாவிற்கு வந்திருந்தது குறிக்கப்படவில்லை என்பது உண்மையே. ஆயின், பின் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/76&oldid=793405" இலிருந்து மீள்விக்கப்பட்டது