பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 89 'திருச்செங்கோட்டிலே கோயில் கொண்டிருக்கும் ஈசனாகிய சிவபெருமான், மதிக்கத்தக்க தலையோடாகிய பிட்சாபாத்திரத்தை ஏந்தியவராகப் பிச்சை ஏற்று உண்பதற்குப் புறப்பட்டுவிட்டார்’ என்று அறிந்த கண்ணபுரத்துக் கோயி லார்கள், திருமாலும் சிவனைத் தொடர்ந்து போய்விடக் கூடாதே என்று பயந்து, திருக்கோயிற் கதவை அடைத்துத் தாழும் இட்டுவிட்டார்கள். அதனாலே, வெண்ணையுண்ட மாயனார், அது கிடையாமல் மண்ணைத் தின்பவரானார்! தாம் தரிசிக்கச் சென்றபோது திருக்கோயிற் கதவினைக் கோயிலார் அடைத்துத் தாழிடக் கண்டவர், இப்படிப் பாடி அவர்கள் செயலைப் பழித்தனர் என்பர். மண - பூமியும் ஆம்; அது பெருமான் தம் திருவுதரத்தே உலகினை அடக்கிக் காப்பதனைக் குறித்தாம். சிவன் உணவேதும் கிடையாமல், பிச்சை எடுக்கப் போய்விட்டான் எனப் பிட்சாடன் மூர்த்தத்தையும், வெண்ணை யுண்ட மாயன் மண்ணையுண்டான் எனத் திருமாலின் சிறப்பையும் பாடிய நயத்தினை அறிந்து இன்புறுக பெருமாள் பிறந்த கதை திருக்கண்ணபுரம் ஒரு வைணவத் தலம். அங்கே கோயில் கொண்டிருக்கும் மூர்த்தியின் பெயர் சவுரி நாராயணன். அவர் திருநட்சத்திரம் அத்தம் என்பர். அதனைக் குறித்துப் பாடியது இது. உத்திரத்துக் கோர்நா ளுரோகணிக்குப் பத்தாநாள் சித்திரைக்கு நேரே சிறந்தநாள் - எத்திசையும் காராரும் பூஞ்சோலைக் கண்ணபுரம் வாழ்சவுரி நாரா யணன் பிறந்த நாள். (136) எத்திசையிலும் மேகங்கள் படிகின்ற பூஞ்சோலைகளை யுடைய திருக்கண்ணபுரத்திலே கோயில்கொண்டிருக்கும் சவுரி நாராயணரின் பிறந்த நாள் - உத்திரத்துக்கு அடுத்ததான நட்சத்திரமும் உரோணிக்குப் பத்தாவது நட்சத்திரமும், சித்திரைக்கு நேரே முற்பட்ட நட்சத்திரமும் ஆகிய சிறப்புடைய அத்த நட்சத்திரம் என்று அறிக. உன்னிலும் அதிகம் காளமேகம் திருக் கண்ணபுரத்தில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது தெருவில் செல்லும்போது மழை பெய்யத் தொடங் கிற்று. அருகிலிருந்த பெருமாள் கோயிலில் சற்று ஒதுங்கிக் கொள்ள விரைகிறார் காளமேகம். அந்தக் கோயில் நம்பியாரோ இவைர உள்ளேவிட விரும்பவில்லை. கதவை அடைத்துத் தாளிடுகிறார். அப்போது, 'பெருமாளே! உன்னிலுமோ நான் அதிகம் என்று சொல்வது போலப் பாடியது இது.