பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 97 பெருமானின் நடனத்தை ஆடு திருடியதாகவும், அதனைப்பற்றிக் கேட்கப் போக ஆடுதிருடியதும் அல்லாமல் மழுவேந்திச் சண்டைக்கு வந்ததாகவும் குற்றஞ்சுமத்துகிறார். ஆடெடுத்த மெய்ப்பாட்டினைத் தாமே அவன் திருமேனியிற் கண்டதாகவும், மேலும் ஆடு மேய்ப்போனாகிய ஆயன் நெய்யிலே கையிட்டுச் சத்தியம் செய்ததாகவும் சொல்லுகிறார். இப்படி நிந்திப்பது போலக் கூத்தனின் நடனத்தை வியந்து போற்றவும் செய்கிறார் கவிஞர் காளமேகம். மாடு எடுத்துப் போவதேன்? ஆடு திருடிய கள்வன் அவன், அவனை ஒரு மாடு எடுத்துக் கொண்டு போகிறதே? இது என்ன மாயமோ? சிதம்பரத்துத் தில்லை மூவாயிரவரின் கண் முன்னேயே இப்படியும் நடக்குமோ? இது அநியாயம் அல்லவோ?’ கவிஞர் இப்படிக் கவலையோடு கேட்கின்றார். ஆடெடுத்த தில்லை அனவரவத் தாண்டவனை மாடெடுத்துப் போவதென்ன மாயமோ-நீடுமுயர் வானத்தார் போற்றுகின்ற வண்மைச் சிதம்பரத்துத் தானதார் பார்த்திருக்கத் தான். (149) 'ஆட்டினை எடுத்த அந்தத் தில்லைநகரத்து அன. வரதத் தாண்டவன் என்பவனை ஒரு மாடு எடுத்துப் போவதுதான் என்ன மாயமோ? மிகவுயர்ந்த வானத்தவரும் போற்றுகின்ற வண்மை யினை உடைய சிதம்பரத்துத் தானத்தார்கள் பார்த்திருக்கவும் இப்படி நடக்கிறதே? . பெருமான் ரிஷபாருடராகப் பவனி வருவதை இப்படிப் போற்றுகின்றார் கவிஞர். அனவரதத் தாண்டவன் - நாள் தவறாது நடனம் செய்பவன். மாடு - நந்தீசர். - வேனிப் பிரான்! பெருமான் மன்மதனையும் முப்புரத்தையும் எரித்தான். எனினும், அவன் உடலில் ஒருபாதி உமையாளுடையதல்லவா? அவன் செய்ததெல்லாம் தன்பத்தினியின் துணையினைக் கொண்டேதான் அல்லவோ? என்கிறார் கவிஞர். சிவன் செயலில் சக்திக்கும் சரிபாதி பங்கு உண்டென்பது உண்மைதானே! சித்தசனை முப்புரத்தைச் செந்தழலாய் வீழவொரு பத்தினியைக் கொண்டெரியப் பண்ணினான்-நித்தம் மறையோத வீற்றிருக்கும் மண்டலமென் றில்லைப் பிறைகுடும் வேனிப் பிரான். (150) “தில்லை நகரத்திலே வீற்றிருப்பவனும், இளம்பிறை சூடியவனும், செஞ்சடையினை உடையவனுமாகிய பெருமான்