பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 99 மாடு கிடப்பாதம் மனையா ளுடற்பாதி தேடுதற்கும் பிள்ளை தினைக்கடம்பன்-சாடில் அரவா பரணம்பூ ணம்பலத்தீர் பிச்சை இரவாம னிரென்செய் வர்? (152) மாடோ கிடப்பாத மாகிவிட்டது! மனையாளோ உடல் பாதியாகிப் போய்விட்டாள்! பொருள் தேடி வருவதற்கு உரிய பிள்ளையோ தினைக் கொல்லைகளிலும் கடப்பமரச் சோலை களிலுமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறான். பாம்பா பரணத்தினை அணிகின்றவரே! அம்பலத்திலே யுள்ளவரே! நீர் பிச்சை எடுக்காமல் வேறு என்னதான் செய்வீர்?" 'இரவாமல் என்ன செய்வீர்?’ என்று கேட்பதன்மூலம். பெருமானின் பிட்சாடன அருட்கோலத்தைப் போற்றுகின்றார் காளமேகம். மாடு என்றது நந்தி பெருமானை. கிடப்பாதம் - ஒரு மாட்டு நோய், மனையாள் - உமை, உடற்பாதி - உடலிற்பாதி; உடல் பாதியாகி நலிவுற்றவள்.கடம்பன்-முருகன். மாடும் கிடையாயிற்று: மனைவியும் உடல்பாதியானாள்; மகனும் ஊர் சுற்றுபவனானான்; இந் நிலையிலே பிச்சை எடுக்காமல் உம்மால் எப்படி உயிர் வாழ முடியும்? என்று பாடுகிறார். சொக்கலிங்க சுகம் மதுரைச் சொக்கலிங்கப் பெருமானைத் தரிசித்த கவிஞர் அந்த இன்பத்தை வியந்து பாடுகிறார். காண்டரிய மேனியுமொண் கந்தரமுஞ் சுந்தரனாய் ஆண்டதுவு மேனிக் கமைந்ததுவும் - நீண்டமுகின் மைக்கலிங்க மாகமணி மாடமணி மாமதுரைச் சொக்கலிங்க மென்னுஞ் சுகம். (153) “காணுதற்கும் அரியவான திருமேனியும், ஒளியுடைய செஞ்சடையும், சுந்தரனாக வந்து ஆட்கொண்டதும், மேனி யிடத்தேயே அமைந்ததுவும், எல்லாம் நீண்ட மேகங்களே கருத்து ஆடையாக மேலே விளங்கும் அழகிய மாடங்களையுடைய சிறந்த மதுரைச் சொக்கலிங்கம் என்னும் பேரின்பப் பொருளுக்கே உரியனவாகும்’ சுந்தரம் - மேகம். - திருநாமம் எது? காஞ்சி வரதராசப் பெருமானைப் போற்றி வருபவர் ஒருவர், காளமேகத்திடத்தே வந்து சிவபெருமானைக் குறை கூறியும் ஒருநாள் பேசிவிடுகிறார். அதனால், சினங்கொண்ட கவிஞர் வரதராசப் பெருமானைக் குறிப்பிட்டு இப்படிப் பாடுகிறார்.