பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 7 இந்தம் ஆம் வருணன் என் இருகண் விட்டு அகலான் - இறுதியான வருணன் என் இரு கண்களையும் விட்டு ஒரு போதுமே அகலாதிருக்கின்றான் (துயரத்தால் கண்கள் சதா நீர் சொரிகின்றன); அகத்துறு மக்களும் யானும் அனிலமது ஆகும் அமுதினைக் கொள்வோம்-என் வீட்டிலே தங்கியிருக்கும் என்மக்களும் யானும் காற்று ஆகிய அமுதம் ஒன்றனையே பசிக்கு உணவாக உட் கொள் வோம் ஆயினோம்; யார் எனை உலகினில் ஒப்பார் . இத்தகைய, நிலையிருக்கும் எனக்கு உலகினில் ஒப்பாவார்தாம் யாவரோ? சந்ததம் இந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித் தலைசெயும் என்னை - இத்தகைய சிறப்பினையே எந்நாளும் பெற்றுத் தரித்திரம் என்னும் அரசனை வணங்கிப் பணிந்து வாழும் என்னை, - நிலைசெய் கல்யாணிச் சாளுவத் திருமலைராயன் - நிலை பெற்ற கல்யாண குணங்களையுடைய சாளுவத் திருமலைராயன் என்பவன், மந்தர புயனாம் கோப்பயன் உதவும் மகிபதி - மந்தர மலைபோன்ற புஜங்களையுடையவன்; புலவர்களுக்கு ராஜ மரியாதைகளை அளித்து உதவும் மன்னவன், விதரண ராமன்; நான்கும் தெரிந்த ராமனைப் போன்று சிறந்தவன். வாக்கினால் குபேரன் ஆக்கினால் தன் ஆணையினாலே குபேர செல்வத்திற்கு உரியவனாக்கினால், மாசில ஈசன் அவனே ஆவான் - குற்றமற்ற கடவுள் எனக்கு அவனே ஆவான். இந்தச் செய்யுளை நன்றாகக் கவனிக்க வேண்டும். காளமேகப் புலவருக்குக் குழந்தைகளும் இருந்தார்கள் என்று இதனால் தெரிகிறது. திருமலைராயனைப் புகழ்ந்தது வீமனென வலிமிகுந்த திருமலைரா யன்கீர்த்தி வெள்ளம் பொங்கத் தாமரையி னயனோடிச் சத்தியலோ கம்புகுந்தான் சங்க பாணி பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான் சிவன்கைலைப் பொருப்பி லேறிச் சோமனையும் தலைக்கணிந்து வடவரைத்தண் டாலாழஞ் சோதித் தானே. (7) வீமன் என வலிமிகுந்த திருமலைராயன் - iமசேனன் என்னும்படி ஆற்றலால் சிறப்புற்றிருக்கும் திருமலைராயன் என்பவனின், கீர்த்தி வெள்ளம் பொங்க புகழாகிய வெள்ள மானது பொங்கி எழுந்ததாக, -