பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் குதிரை குதிரை!! அதிமதுரக் கவிராயர் குதிரையேறி வர அந்தக் குதிரையைப் பாடியது. - கோக்குதிரை நின்குதிரை கோவன்மது ராவொன்னார் மாக்கு திரையெல்லா மண்குதிரை-தூக்குதிரை தூங்கற் கரைக்குதிரை சொக்கன் குதிரைசது: ரங்கக் குதிரைகளே யாம். (11) கோவன் மதுரா - திருக்கோவலூரானான அதிமதுரமே! நின் குதிரை கோக்குதிரை - நின் குதிரைதான் ராஜா பவனி வரும் குதிரை ஒன்னார் மாக்குதிரை எல்லாம் மண்குதிரை நின்னைப் பகைத்தோரின் பெரிய குதிரைகள் எல்லாம் மண் குதிரைகள், து குதிரை - தூது அவையும் குதிரைகளா? தூங்கற் கரைக் குதிரை ஒரு தூங்கல் குதிரைக்கும் கூட அரைவாசியே சொல்லத்தகும் குதிரைகளாக அன்றோ இருக்கின்றன, சொக்கன் குதிரை சொக்கநாதர் குதிரையாகக் கொணர்ந்த நரிகள்தாம் அவை; சதுரங்கக் குதிரைகளே யாம் - சதுரங்க ஆட்டத்திற் பயன்படுத்தப் படும் காய்களான குதிரைகளே அவை ஆம் பின் ஒரு சமயம், அதிமதுரக்கவி ஏறிவந்த குதிரையைப் போற்றிக் கூறுவது இது; அவரைப் பாராட்டாமல், அவர் குதிரையைப் பாராட்டியதாகக் கொள்க. இதனால் 'போற்றத் தகுந்தது குதிரையே அல்லாமல், அதன்மேல் ஊர்ந்துவரும் நீர் அன்று என்று அதிமதுரத்தைப் பழித்தலையும் கவிராயர் இதன் மூலமாகச் செய்கின்றனர். மண்மாரி பெய்க! கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர் காளைகளாய் நின்று கதறுமூர்-நாளையே விண்மாரி யற்று வெளுத்து மிகக்கறுத்து மண்மாரி பெய்கவிந்த வான். (12) எமகண்டம் பாடி வெற்றிபெற்ற பின்னரும், காளமேகத்தைத் திருமலைராயன் அலட்சியப்படுத்த, அப்போது அவர் பாடியது இது. கோளர் இருக்கும் ஊர் கொலைகாரர்கள் இருக்கின்ற இவ்வூர் கோள் கரவு கற்ற ஊர் - புறங்கூறவும் வஞ்சகம் செய்யவும் கற்றிருக்கின்ற இவ்வூர்; காளைகளாய் நின்று கதறும் ஊர் காளைகளைப் போன்று மக்கள் கட்டுப்பாடில்லாமல் நின்று கதறிக் கொண்டிருக்கும் இவ்வூர், இதன்கண், நாளையே நாளைக்கே இந்த வான்-இந்த வானம், விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து வான்மழை இல்லாது போய் வெளுத்துத் தோன்றி