பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 11 மிகவும் சினந்து மண்மாரி பெய்க மண்ணே மழையாகப் பெய்வதாக இப்படி ஊருக்கே சாபம் தந்து வசைபாடுகிறார் காளமேகம் அது அப்படியே நிகழ்ந்ததெனவும் உரைப்பர். அரசனும் அவன் அவையும் இழைத்த தவறுக்கு ஊரே பலியான செய்தி இது. ஆட்சி செய்பவன் நல்லவனாயில்லாத போது, அவனால் அந்த ஊருக்கே அழிவுவரும் என்பதை மெய்ப்பிப்பதும் இது. அழிய வாட்டு! t ‘மண்மாரி பெய்தால் மட்டும் போதாது; ஊர் முற்றவுமே அழியுமாறு வாட்டுதல் வேண்டுதல்’ எனவும் நினைக்கிறார் காளமேகம். மன்மதனை அழித்தது போல சிவனே! இந்த ஊரையும் எரித்து அழித்துவிடு' என்கிறார். - செய்யாத செய்த திருமலைராயன்வரையில் அய்யா வரனே அரைநொடியில்-வெய்யதழற் கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற்றியோர் மண்மாரி யாலழிய வாட்டு. - (13) அய்யா அரனே - என் அய்யனே! சிவபெருமானே! செய்யாத செய்த திருமலைராயன் வரையில் - எனக்குச் செய்யத்தகாத எல்லாம் செய்த இந்தத் திருமலைராயனுடைய ஆட்சி எல்லைக்கு உட்பட்ட நாட்டில் உள்ள, தீயோர் - தீயவர்களை, அரை நொடியில் - அரைநொடிப்போதிலேயே, வெய்ய தழற்கண் மாரியால் மதனைக் கட்டழித்தாற்போல் - வெம்மையான நெருப்புக் கண் பார்வையான மழையினாலே மன்மதனின் ஆற்றலை யெல்லாம் போக்கிச் சாம்பராக்கினாற்போல, மண் மாரியால் அழிய வாட்டு, மண்மாரியினாலே அழியும்படியாக வாட்டு வாயாக. காட்டு - உருவ அமைப்பும் ஆம். திருமலைராயன் பட்டினம் இன்றும் மண் மேடிட்டதன் அடையாளங்களுடன் காணப்படுகிறது. பல இடங்களில் ராயர் காலத்துப் பொருள்கள் புதையலாக அகப்பட்டதாம். இவை இந்தக் கவி சாப விளைவென்பது சான்றோர் சொல்வது. 3. குறிப்புக்குப் பாடியவை ("இப்படிப்பாடுக அப்படிப்பாடுக” என்று ஒருவர் கேட்க, அவர் கொடுக்கும் சமிக்ஞைப்படியே, பொருள் நயத்துடனும் சொல்நயத்துடனும் விரைவிலே பாடிய கவிகள் இவை. சொல்லாற்றல் மிக்க புலமைச் செறிவாளர்க்கே எளிதாகக் கைவரும் தனிச்சிறப்புடையன இவை. காளமேகத்தின் இத்தகைய செய்யுட்களை இப்பகுதியில் காண்போம்)