பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் முச்சங்கத் தலைவர்கள் 'முச்சங்கத்துப் புலவர்கள், அவர்கள், இயற்றிய நூல்கள் ஆகியவற்றை எல்லாம் ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுக என்றனர் ஒருவர். அதற்கேற்பக் கவிஞர் சொல்லியது இச் செய்யுள். நூலாநா லாயிரநா நூற்றுநாற் பத்தொன்பான் பாலாநா னுற்றுநாற் பத்தொன்பான்-மேலாநாற் பத்தொன்பான் சங்கமறு பத்துநா லாடலுக்கும் கர்த்தன் மதுரையிற் சொக்கன். (27) 'நூலாம் நாலாயிர நானூற்று நாற்பத்தொன்பான் நாலாயிரத்து நானுற்று நாற்பத்தொன்பது நூல்களையும், பாலாம் நானூற்று நாற்பத்தொன்பான் அவற்றை இயற்றி 449 புலவர் களையும், மேலான் நாற்பத்தொன்பான் அவர்களின் தலைவராகத் திகழ்ந்த நாற்பத்து ஒன்பதின்மரையும் உடைய, சங்கம் - மூன்று சங்கங்களுக்கும் அறுபத்து நாலு ஆடலுக்கு 64 திருவிளை யாடல்களுக்கும், கர்த்தன் மதுரையிற் சொக்கன் உண்மையில் என்றும் தலைவனாக விளங்கியவன் மதுரையிலே கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமானே ஆவான். சங்கங்கள் மூன்றாகவும், அதன்கண் இருந்து தமிழாய்ந்தார் ஆயிரக்கணக்கினராகவும், திருவிளையாடல்கள் அறுபத்து நான்காகவும் விளங்கினவேனும், அவை அனைத்துக்கும் முதல்வனாகியவன் சொக்கநாதப் பெருமானே என்பது கருத்து. திருமாலின் அவதாரம் திருமால் பத்து அவதாரங்களை எடுத்து உலகத்தின் நன்மைக்காகப் பாடுபட்டனர் என்பர் அவை மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிங்கம், பரசுராமன், ராமன், பலராமன் கண்ணன் என்ற ஒன்பதும்,இனிவரப்போகும் கல்கியும் ஆம்.இவை அனைத்தையும் ஒரே வெண்பாவில் அமைத்துப் பாடுவீராக என்றார் அதிமதுரகவி “ஆன்றோர் பாராட்டுகின்ற மெய்யான புகழினை உடைய திருவேங்கடமுடைய பெருமானே! ஒரு வெண்பாவின் பாதி யிலேயே, என் கருத்திற்கு இசை, உன் அவதாரத்தை எடுத்துக் கூறுவதற்கு வந்து அருள் செய்வாயாக "மச்சாவதாரனே கூர்மாவதாரனே கோலம் என்னும் பன்றி அவதாரனே! நரசிங்க மூர்த்தியே! வாமனனே! பரசுராமனே! தசரதராமனே! பலராமனே! கோபாலனே! இனிக் கல்கி அவதாரமாகவும் ஆகின்ற பெருமானே' இந்தப் பொருள் அமைய, வெண்பாவிற் பாதியிலேயே பத்து அவதாரங்களும் வருமாறு பாடினார் காளமேகம்.