பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் - 47 இலக்கியப் பயிற்சியானது நுட்பமான அறிவு நலத்தைப் பெறுவதற்கும். ஒழுகலாறுகளை நெறிப்படுத்துவதற்கும் பயன்பட வேண்டும். சிந்தனையைத் தூண்டிச் செயற் படுத்தும் இச்செய்யுட்கள், அந்த இருவகைப் பயன்களையும் தருவதாகும். காளமேகம் இந்த வகையில் பெரும் புலமை பெற்றவர். மேற்போக்காகக் கேலிசெய்வது போலத் தோன்றுமாறும், அதே சமயம் நுட்பமான பொருள்வளம் அமையுமாறும் செய்யுள் செய்வதில் நிகரற்றவர். ஒருவகையான சொல்லமைப்புக்கள், அவற்றைப் பிரிக்கும் திறனால் இரண்டு மூன்று வகையான பொருள் அமைதிகளைத் தருகின்றன. சொல்லாட்சியும் இலக்கண அறிவும் இதற்கு நிரம்ப வேண்டும். கருத்துகளிலும் தெளிவு இருக்க வேண்டும். அந்த வகையில், இலக்கிய மாணவர்களுக்கு இப்பகுதிப் பாடல்கள் நிறைந்த பயிற்சியைத் தரும். படித்துப் படித்துச் சிந்தித்துச் சிந்தித்து இன்புறவேண்டிய சுவையான செய்யுட்கள் இவை. 5. வித்தாரச் செய்யுட்கள் (செய்யுள் அமைதியுடன் வித்தாரமாகப் பாடியவை இவை. நுட்பமாகப் பொருளைக் கண்டு உணர்தல் வேண்டும். வித்தாரம் - பரந்துபட்ட அறிவு) ககர வருக்கப் பாட்டு காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க-கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா. (70) "ககர வருக்கமே முற்றவும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க" எனக் கேட்டவர் வியக்குமாறு சொல்லிய்து இது. காக்கைக்கு ஆகா கூகை - காக்கைக்கு கூகை இரவில் வெல்லுதற்கு ஆகாது, கூகைக்கு ஆகா காக்கை-கூகைக்குக் காக்கை பகலில் வெல்லுதற்கு ஆகாது, (அதனால்) கோக்கு கூ காக்கைக்கு - அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பாற்று கைக்கும்; கொக்கு ஒக்க கொக்கைப் போலத் தகுதியான சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும், கைக்கைக்கு - பகையை எதிர்த்து, காக்கைக்கு காப்பாற்றுவதற்கு, கைக்கு ஐக்கு ஆகா (காலமற்ற காலமாயின்) சாமர்த்தியமுள்ள தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.