பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் யினைப் பரப்பிக் கொண்டு முன்னாக முன்னாக வந்தாலும், என் மனமென்னும் மானமான் - என் மனம் என்று சொல்லப் படுகின்ற பெரிய யானையானது, மன்னா நாணும் ஈனமாம் - மிகவும் வெட்கப்படும்; அவட்குத் தாழ்ந்தும் இழிவுற்று நீங்கும். ஆணின் உள்ளத்து எத்துணைத் தற்பெருமை இருப்பினும், அது ஒரு பெண் முன்னே வரக் கண்டதுமே குன்றிப் போய் வெட்கித் தாழ்வுற்று விடும் தன்மை உடையதாகி விடுகிறது என்பது கருத்து. சொற்களைப் பகுத்து பொருள் காணும் வகையினை அறிந்து அநுபவிக்கவும். இடையினப் பாட்டு 'யரல வழள என்பவை இடையின எழுத்துக்கள். இவையே முற்றவும் வருமாறு செய்யப் பெற்றது இச்செய்யுள். அங்ங்னம் ஒருவர் பாடக்கேட்கக் கவிஞர் பாடியது. ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்து, அந்தப் பிரிவுக்கு ஆற்றாது புலம்புவதாகப் பொருள் அமைதி கொண்டு விளங்குவது இது. விரவலராய் வாழ்வாரை வெல்வா யொழிவா யிரவுலவா வேலை யொலியே-வரவொழிவா யாயர்வா யேயரிவை யாருயிரை யீராவோ யாயர்வாய் வேயோ வழல். (75) வேலையின் ஒலியே - கடலின் பேரொலியே; விரவலராய் வாழ்வோரை வெல்வாய் ஒழிவாய் தம் நாயகரோடு கலந்து இராதவராக வாழ்கின்ற பெண்களைப் பொருது வெற்றி கொள்வாய் நீ! அந்தச் செயலை இனிக் கைவிடுவாயாக இரவு உலவாய் இரவு நேரத்தே நீ அலைகளாய் எழுந்து உலவுதலையும் செய்யாதே! வரவு ஒழிவாய் நின் வரவினையும் கைவிடுவாயாக. ஆயர்வாயே அரிவை ஆருயிரை ஈராவோ ஆயர்களின் வாய் ஒன்றே எம்போற் பெண்களின் அரிய உயிரினைப் பிளந்து அழிக்கப் போதாதோ? ஆயர் வாய் வேய் அழல் அந்த ஆயர்களின் வாயிற் புல்லாங்குழல் அழல்போல் எம்மை எரிக்கின்றதே! "ஆயர்வாயோ!' என்பதற்குத் தாயரின் வாய்ச்சொற்களோ எனவும் பொருள் கொள்ளலாம்; தாயரின் கண்டிப்பு என்பது கருத்தாகும். ஒன்று முதல் பதினெட்டு 'ஒன்று முதல் பதினெட்டு வரை அடைசொல் இல்லாமல் அமைத்து ஒரு வெண்பா இயற்றுக’ என்றார் ஒருவர்.