பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பசிய நீரினை மூடிக்கொண்டிருக்கும் பொருளும் தாணு உரித்ததும் - சிவபெருமான் உரித்ததுவும், சக்கரத்தோன் ஊனதுவும் சக்கரப்படையினை உடையோனான திருமாலின் உணவாக விளங்கியதும், எம்மானை ஏத்துவதும் - எம் பெருமானாகிய சிவனைத் துதிப்பதுவும், ஈசன் இடத்தும் அந்த ஈசனின் இடப்பாகத்தே ஆகியதும், தைமாக இபம் கு உனிமாது அம் - தை என்னும் சொல்லும், மாசு ஆகிய பாசியும், இபம் என்னும் யானையும், நிலமும், மனத்தே நினைதலும், அழகிய மாதாம் உமையம்மையும் என முறையே ஆவதாகும். தை மாசி பங்குனி மாதம் என்றதனை, தை, மாசு, இபம்.கு, உனி, அம் மாது எனப்பதப்பிரிவு செய்து அதற்கேற்பப் பொருள் கொள்ளல்வேண்டும். உன்னி, உனி என்று ஆயது இடைக்குறை. ஆறு சாதிகள் ஆறு சாதிகள் ஒரே செய்யுளுள் வருமாறு, ஒருவர் பாடுவதற்குக் கூறக் கவிஞர்பிரான் அப்போது பாடியது. சாதிப் பெயர்கள் வந்தன; ஆனால் பொருள் அமைதி வேறு சுவையுடையதாக அமைந்தது. கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார் செம்மான் சதுரரைத் திருவரசை-அம்மாகேள் வானியனும் பொன்னேரி வாழும்வெள் ளாழனுமே சேனியனு மன்றே தெரிந்து (79) அம்மா கேள் - அம்மையே கேட்பாயாக! வாணியனும் பொன் ஏரி வாழும் வெள் ஆழனும் - வாணியைக் கொண்டோ னான பிரமனும், திருமகளாகிய அழகி தன் மார்பிலே வீற்றிருக்கப் பெற்றோனாகிய பாற்கடலிலே பள்ளிகொள்கின்ற திருமாலும், சேணியனும் - இந்திரனும். அன்றே தெரிந்து அந்நாளிலேயே உண்மையை அறிந்துகொண்டு, செம்மான் சதுரரை - சிவந்த மாலையினைக் கொண்ட சதுரரான பெருமானை, திரு அரசை - அழகிய நடராசப் பெருமானை, கம்மாளன் அங்கிக் கண் நக்கன் எனவே துதித்தார் . கபாலத்தை ஏந்தியவன் என்றும், நெருப்புக் கண்ணாலே சிரித்துப் புரமெரித்தவன் என்றும் வாழ்த்தினார்கள்; அதனால் உயர்ந்தார்கள் என்பது கருத்து. நடுவெழுத்து அலங்காரம் திருமால்வா கனநாவா யிராசி யொன்று சினைதெவிட்டார் மாதுலன்கோ கிலமிவ் வேழின் உருவாமே ழெழுத்தினடு வெனக்குச் செய்தான் உகந்துபதி னான்கினையும் தானே கொண்டான்