பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூப்பான் மழுவும் ஆதி முதல்வனான சிவபிரானின் மழுவாயுதமும், முராரி திருச்சக்கரமும் - முரன் என்பானைக் கொன்று முராளி எனப் புகழ்பெற்ற திருமாலின் சிறந்த சக்கரப்படையும், பாப்பான் கதையும் பிரமனின் கதாயுதமும், பறிபோச்சோ அந்த எலியை அடித்துப் பிள்ளையைக் காப்பதற்கு வழியில்லாமல், அவர்களிடமிருந்து பறி போய்விட்டதோ? 'யானையை எலி இழுத்துப் போகிற அதிசயத்தைப் பார்த்தீர்களோ என்று வியப்பதும் ஆம் ஆடாரோ அவர்! திருவாரூரிலே தியாகராசப் பெருமானின் திருநடனத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தார் கவிஞர். எவ்வளவு அரிய நடனம்! பெருமான்; எவ்வாறு ஆடுகின்றார்! என்று போற்றினார் ஒருவர். அப்போது, 'ஏனய்யா அவர் ஆட மாட்டார்?' என்ற பாடிய நிந்தாஸ்துதி இது. ஆடாரோ பின்னையவ ரன்பரெல்லாம் பார்த்திருக்க நீடாரூர் வீதியிலே நின்றுதான்-தோடாரும் மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர் கைக்கே பணமிருந்தக் கால். (111) “கையிலே பணமிருந்த தென்றால் அவன் ஏனய்யா வீதியில் ஆட்டம் போடமாட்டான்?" என்று எக்காளமாகக் கேட்கிறார் கவிஞர். தோடு ஆரும் மெய்க்கே பரிமளங்கள் வீசும் தியாகேசர் - காதுகளிலே பொருந்தியிருக்கும் தோடுகளும், உடலிடத்தே கமழ்கின்ற வாசனைப் பொருள்களின் மணமும் உடையவர் இத் தியாகேசர், அவர் கைக்கே பணம் இருந்தக்கால் - கையிடத்தே பணம் இருந்ததென்றால் (பணம் - பாம்பும் ஆம்) அவர் அன்ப ரெல்லாம் பார்த்திருக்க - அவர் தம் அடியவர்கள் அனைவரும் கண்டு இன்புற்றிருக்க, ஆரூர் வீதியிலே நின்று ஆடாரோ - திருவாரூர்த் தெருவிலே நின்று இப்படி ஆடமாட்டாரோ? ‘கையிலே பணமிருந்தால் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவான்', என்ற உலகியற் கருத்தை வைத்து இப்படிக் கூறுகிறார். பணம் - பாம்புப் படமும், பணமும் ஆகும். ஆனின் கழல் திருவாரூரிலே தியாகேசரின் ரிஷபவாகன உற்சவம் உள்ளத்தைக் கவரக் காளமேகம் மெய்ம்மறந்து நிற்கிறார். அப்போது பெருமானுடைய திருப்பாதங்களின் சிறப்பினை வியந்து இப்படிப் பாடுகிறார்.