பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தங்கச் சங்கிலி ہی مم------ நிலைமையும் சீர்திருந்தாததோடு இன்று படுமோச மாகிவிட்டது” என்று அவன் உள்ளம் உருகினன். கமலா தன் ஆறுதல் மொழிகளை வேறு விதமாக மாற்றிள்ை: "இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள்ளே நீங்கள் எப்படியாவது முதலாளியிடம் உங்கள் யோசனைகளைக் கூறப் பழகிக் கொள்ள வேண்டும். நம் குழந்தைகளை நினைத்துப் பாருங்கள், உங்களுக்குத் துணிச்சல் பிறந்துவிடும்.” . "கமலா, நீ பக்கத்தில் இருக்கும்போது எனக்கு நம்பிக்கை உண்டாகிறது. ஆனல் காரியாலயம் போனதும் எப்படியோ அது மறைந்துவிடுகிறது. உன்னுடைய நினைவுகூட அதை மேலோங்கச் செய்ய முடிகிறதில்லை.” .. "ஒரே தீர்மானத்தோடு முயன்று பாருங்கள். முயற்சி செய்தால் ஆகாத காரியம் இல்லை’ என்று கமலா மேலும் தைரியமாகக் கூறினள். அவளுக்கும் மனத்திற்குள்ளே கவலைதான். ஆனால் அதை அவள் வெளியில் காட்டவில்லை. நாட்கள் ஓட ஆரம்பித்தன. முன்னறிக்கை கொடுத்த ஒரு மாதமும் முடியப் போகிறது. சந்திரன் வகையறியாது திண்டாடினன். அவ னுடைய கவலை ஒவ்வொரு நாளும் அதிகரித்தது. அவன் எங்கெங்கோ ஒடினன். யார் யாரிடமோ ஆலோசனை கேட்டுப் பார்த்தான். ஒன்றும் அவனு டைய குறையைத் தீர்ப்பதாக இல்லை. பலருக்கு அவனுடைய மன நிலைமையை அறிந்துகொள்ளவே முடியவில்லை. . ஆயிற்று. மாதத்தின் கடைசி நாள் பிறந்து விட்டது. சந்திரன் காரியாலயத்திற்கு வழக்கம் போல் சென்று ஆமர்ந்திருக்கிருன். ஆனுல் அவஜ் மனம் கணக்குகளிலே செல்லவில்லை. 'இன்றைக்கு