பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தங்கச் சங்கிலி றேன்" என்று மீசை தாடியார் பதில் கூறிவிட்டுது தமது கதையைத் தொடர்ந்தார் : - - "திருட்டிலே ராமசாமி பலே கெட்டிக்கார ழ எந்த வீட்டிலும் சாமர்த்தியமாக கை வைத்து விடு வான். எவ்வளவு காவல் இருந்தாலும் அவனுக்கு லட்சியமில்லை. எல்லோரையும் ஏமாற்றிவிட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்துவிடுவான், ஜனங் களுக்கு அவனிடத்திலே ஒரே பயம். நினைத்தால், அவன் என்ன வேண்டுமானலும் செய்வான் என்று அவர்கள் நம்பினர்கள். போலீசார் அவனைப் பிடிக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவன் பெயர் கூட யாருக்கும் தெரியாது. ஆனுல் அவன் ஒரு மாயக்காரனென்றும், அவனிடத்திலே ம க் க ಶಿಗ್ಗೆ மயக்கித் தூக்கத்தில் ஆழ்த்தும் சொக்குப்பொடி, இருக்கிறதென்றும் எங்கு பார்த்தாலும் விதந்திகள் பரவியிருந்தன. உண்மையில் அவனிடம் மந்திரமும், கிடையாது ; மாயப் பொடியும் கிடையாது. அவ னிடம் இருந்தது ஒன்றே ஒன்றுதான். அதுதான் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் வலிமையால் அவன் யாரிடமும் சிக்காமல் கொள்ளையடித்து வந்ததாகி அவனே கூறுவான். சங்கிலிக் கறுப்பண்ணன் என்ற தேவதையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அந்த தேவதை மிகவும் சக்தி வாய்ந்ததென்று எல்லோரும், பேசிக்கொள்வார்கள். சின்னக்காரியூர் சங்கின் கறுப்பண்ணன் என்ருல் நினைத்தது முடியும் என்று. சொல்லுகிறவர்கள் ப்லர். அந்தத் தேவதையிடத் திலே ராமசாமிக்கு அபார நம்பிக்கை இருந்தது கொள்ளையடிக்கிற பொருளிலே சரியாகக் கால் பங்கை அவன் அதற்குக் காணிக்கையாக வைத்து. விடுவான். காணிக்கையைச் செலுத்துவதற்கு முன்! థ