பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காளிங்கராயன் கொடை வாழ்க்கையிலே கசப்பேறிய மாரியப்பனையும் இந்தப் பதில் துர்க்கிவாரிப் போட்டது. முத்துசாமி இவ்வாறு. கூறுவானென்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. சற்று நேரம் அவன் ஒன்றும் பேசத் தோன்ருமல் கின்றுகொண்டிருந்தான். எல்லோரும் நினைக்கிறமாதிரி, முத்துசாமி யோக்கியனல்லவோ? இவனும் கடைந்தெடுத்த பேர்வழிதானே?" என்ற சந்தேகங்கள் அவன் மனத்தில் அலைமோதின. இந்தச் சந்தேகங்கள் தோன்றியதும் மாரியப்பன் பேச்சை அதோடு நிறுத்தியிருப்பான். ஆனல் அன்று வழக்கத்திற்கு மாருக முத்துசாமி தனது உள்ளத்தைத் திறந்துகாட்டத் தயாராக இருப்பதுபோல் தோன்றியது. தனது நிலைமையை யாரிடமாவது அப்பொழுது கூருவிட் டால் அவனுக்கு மன அமைதியுண்டாகாது போல அவன் காணப்பட்டான். அதனல் அவனே தொடர்ந்து பேச லானன். - - ஏன் மாரியப்பா, கான் கினைக்கிறது சரியென்று உனக் குப் படவில்லையா? ஏன் இப்படி மெளனமாக நிற்கிருய்?” "ஆமாம். ஒரு மாசத்துக்குளளே அப்படி என்ன குற். றம் செய்துவிட்டாய்?” 'குற்றம் செய்ய ஒரு மாசம் வேணுமா? ஒரு நாளிலே எத்தனை குற்றம் செய்ய முடியாது? கொலேகூடச் செய்து விடலாம்.” 'முத்துசாமீ, அது எனக்குத் தெரியாதா என்ன? ஆனல் நீ அப்படிச் செய்வாயா என்பதுதான் கேள்வி.” கான் இந்தத் தடவை ஒரு பெரிய குற்றம் செய்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்” என்று கூறிப் பெருமூச் செறிந்தான் முத்துசாமி. - -