பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 21

நிஜமாகவா? எத்தனை பேரைக் கொலை செய்தாய்” என்று மேலும் சந்தேகத்தோடு மாரியப்பன் கேட்டான்.

கொலே என்ற வார்த்தை காதில் விழுந்ததும் முத்து சாமி நடுங்கினன். பிறகு சமாளித்துக்கொண்டு மெதுவா தேப் பேசலானன். o 'பத்து வயசுப் பையன் ஒருவனைக் கொலை செய்யப் போனேன். ஆனல் அதற்குள் எல்லோரும் வந்து குழந்தை யைக் காப்பாற்றிவிட்டார்கள்.” - குழந்தையையா? அதுவும் யோ குழந்தையைக் கொல் லப் போனுய்?' வாழ்க்கையிலே எந்தக் கொடுஞ்செயலும் நடக்கும் என்ற ஒரே கிச்சயத்திலிருந்த மாரியப்பன்கூட இதை நம்பத் தயங்கினன். முத்துசாமியின் தோற்றமும் நடத்தையுமே இதற்குக் காரணமாக இருந்தன. 'ஆமாம், பத்து வயசுக் குழந்தை தான். அது என் குழந்தையாகக் கூட இருந்திருக்கலாம் - அதைத்தான் கொல் லப் போனேன்” என்று கூறிவிட்டு முத்துசாமி ஆழ்ந்த சிக் தனையில் முழுகினன். - "அது யார் குழந்தை” என்று கேட்டு மாரியப்பன் அவன் சிந்தனையைக் குலைத்தான். 'என் சிற்றப்பனுக்கு ஒரு மகன் உண்டு. ராமசாமி என்று பெயர். அவனுக்கு என் வயதே இருக்கும். அவனு டைய குழந்தை அது." தாயாதிக் காய்ச்சலா? அப்படிச் சொல்லு. அவன் உன் பூமியையெல்லாம் அபகரிக்கப் பார்த்தான என்ன?” மாரியப்பலுக்கு இப்பொழுது விஷயம் கொஞ்சம் விளங், கியது போலிருந்தது. • - 'ராமசாமி அந்தச் சூழ்ச்சியிலே சேர்ந்திருந்தானே என்னவோ தெரியாது. என் சிற்றப்பன்தான் அப்படிச் குழ்ச்சி செய்தவர்." . .