பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தங்கச் சங்கிலி யோசனை தூரத்திற்குப் பின்னல் கனன்றுகொண் டிருப்பதுபோல ஒரு ஒளி தோன்றிற்று. "ஒரு பாட்டு என் உள்ளத்தை எப்படியோ தொட்டது” என்றேன். 'எந்தப் பாட்டு? என்று கடுமையான குரலில் அவன் கேட்டான். "உனக்கு ஞாபகமில்லையா? இங்கே கேட்ட பாட்டின் அதே மெட்டில் உன் மனைவி ஒரு பாட் டெழுதி ஒரு நாள் பாடினுளே’-என்று கூறி முடிப் பதற்குள் என் கன்னத்திலே பளாரென்று ஒரு அன்ற கொடுத்தான். நான் திகைத்துப் போனேன். "சுந்தரம், இதென்ன இது?’ என்று தடுமாறிக் கொண்டு மெதுவாகக் கேட்டேன். "என் மனைவியின் பாட்டை நினைத்துக்கொண் டிருக்க உனக்கென்ன உரிமை யிருக்கிறது?’ என்று அவன் குரூர வார்த்தை சொன்னன். அவன் முகத் திலே மிருக உணர்ச்சி தாண்டவமாடியது. அவன் உடம்பெல்லாம் பதறிக்கொண்டிருந்தது. என் கண்களிலே எதற்காகவோ நீர் ததும்ப லாயிற்று. அதைச் சுந்தரம் பார்த்துவிட்டான்போல் இருக்கிறது. சட்டென்று அவன் உள்ளம் மாறியது. "சங்கரா, என்னை மன்னித்துக்கொள். இந்த ஒரு வாரமாகத் தினமும் இரண்டு காட்சிக்கும் சென்று இந்த இசையை நான் அனுபவித்து வருகி றேன். ஒவ்வொரு காட்சிக்கும் எனது நண்பர்களில் ஒருவரை அழைத்துச் சென்றேன். ஒருவராவது என் மனைவி பாடிய ஆந்தப்பாட்டை நின்ைத்திருக்கவில்லை, அவர்கள் முற்றிலும் மறந்துவிட்டார்கள். அதிலே எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. அவளுடைய இன்ப கானத்தை மறவாமல் நினைத்துக்கொன்