பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 தங்கச் சங்கிலி ஒன்றையும் பார்த்தால் உடன்ே இரண்டு என்று மனதிற்குள்ளாவது முடிவுகட்டாவிடில் மக்களுக்குத் திருப்தி ஏற்படாது. ஆனால் ஊரார் சந்தேகிக் கிரு.ர்கள் என்று கிழவியோ அவள் மகளோ செல்லப் பனே இம்மிகூட அறியார்கள். ஒருவருஷம் இவ்வாறு கழிந்தது. - - ஒருநாள் யாரும் எதிர்பாராத நிலையில் வீரப்பன் அந்த ஊரிலே தோன்றினன். ராமக்கா ளுக்குத் தன் கணவன் திரும்பியதில் எந்தவிதமான தனி மகிழ்ச்சியும் உண்டாகவில்லை. பழைய நினைவு களெல்லாம் மேலெழுந்து அவளுடைய உள்ளத்தை மரம்போல உணர்ச்சியற்றதாக்கின. இருந்தாலும் கணவன் உயிரோடு வந்திருப்பதிலே அவளுக்குத் திருப்தியும் பெருமையும் ஏற்பட்டது. இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்தும் ராணுவத்திலிருந்து பல சிப்பாய்களை விலக்கி விட்டார்கள். அவர்களில் வீரப்பனும் ஒருவன். அவன் சில நாட்கள் வீட்டு நினைவே இல்லாமல் அங்குமிங்கும் சுற்றினன். ஆனல் அப்படிச் சுற்றுவது ஒன்றிரண்டு மாதங்களில் அலுத்துப் பேய்விட்டது. அதல்ை காட்டுப்பாளையத்தை நினைத்து அங்கு வந்தான். சொந்தமாக மனைவி என்ற ஒருத்தி இருக்கும்போது கண்ட இடத்திலெல்லாம் அலை வானேன் என்று அதுவரை அலைந்ததால் ஏற்பட்ட சலிப்புணர்ச்சியாலேயே அவன் ஊர் வந்தான். தன் மனைவி இளமையின் பூரிப்புப் பொங்க விளங்குவதைக் கண்டு அவன் மகிழச்சி யடைந்தான். அவளோடு இனிமேல் யாதொரு சச்சரவுமில்லாமல் வாழவேண்டும் என்று உறுதி கொண்டான். குடிப் பழக்கம் ஒன்று மட்டும் அவனுடைய உறுதிக்குப் பங்கமாக இருக்குமோ என்று பயந்து அதைக்கூட விட்டுவிட வேண்டும் என்று நினைத்தான். ஆனல்