பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காளிங்கராயன் கொடை கெட்டி செய்து சாலை அமைத்து விட்டார்கள். பாருங்கல் லின் சிறுசிறு சுக்கல்களெல்லாம் மனம் வெந்து கிடந்தன. அவற்றின் கோபம் இன்னும் ஆறவில்லை. எப்படியும் காத் லர்களின்மேல் பழி வாங்கவேண்டுமென்று பல்லேக் கடித் துக்கொண்டிருந்தன. காதலர்கள் அந்தச் சாலேயின் வழியே பலமுறை எவ்விதத் தீங்குக்கும் உட்படாது போய்க் கொண்டுதான் இருந்தார்கள். சல்லிக்கற்கள் அவர்களு டைய காலில் மிதிபட்டன. கோபம் மேலும் மேலும் பிரிட் டுக்கொண்டுதான் இருந்தது. ஆனல் அந்த நாடி செத்தி கோபத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சாலையின் வழியாக அல்லும் பகலும் பலவகையான வண்டிகள் சென்றுகொண்டிருந்தன. அவற்றின் சக்க ரங்களில் அரைபட்டுச் சல்லிக் கற்கள் பொடியாகிக் கொண்டிருந்தன. பொடியான பிறகு காற்றிலே பறந்து அந்தக் காதலர்களின் கண்களிலே விழுந்து அவர்களைக் குருடாக்கவேண்டுமென்று அவை எண்ணிக்கொண்; டிருந்தன. அவர்களே ஒரே கொடியில் கொல்லுவதைவிடக் குருடாக்கி ஆயுள் முழுவதுமே துன்பத்திலே ஆழ்த்துவது இன்னும் கல்ல தண்டனே என்று அவற்றிற்குத் தோன்றியது. : - அவைகளின் விருப்பப்படியே புழுதியாகிவிட்டன. காற்றுத் தேவன் இளமையோடு வந்தான். கரடுமுரடான அந்தப் பாருங்கல் இப்பொழுது நுண்பொடியாக மாறி வானில் எழுந்தது. அந்தப் பாருங்கற் பொடி தென்றல நோக்கி, இளங்காற்றே, நீ எங்கே செல்லுகிருய்?" என்று கேட்டது. "அதோ பார்த்தாயா? அந்த இளங்காளையும் அந்த இளங் கன்னியும் எவ்வளவு உண்மையாக ஒருவரை ஒருவர் காதலிக்கிருர்கள்! அவர்களுக்கு நான் இன்பங் கொடுத்துக் குளிர்ச்சியோடு வீசப் போகிறேன். மாசுமறுவற்ற அன்புக்