பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பால் பொங்கிற்ரு காங்கயம் காளே என்று உலகப் புகழ் பெற்ற காளை கள் வளரும் காங்கயம் என்ற பிரதேசத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கொங்கு நாட்டிலே அது காளைகளுக்கும் வறட்சிக்கும் பேர் போனது. அந்தப் பிர தேசத்தில்தான் இம்ாயக்காட்டு வலசு இருக்கிறது.) ராம சாமியின் குடும்பம் அந்த ஊரிலே கண்ணியமாகத் தலை முறை தலைமுறையாக வாழ்ந்து வந்தது. அந்தக் குடும்பத். திலே யாரும் ஒரு தப்பான காரியத்தைச் செய்ய நினைத்த, தில்லை. தப்பு என்ருல் பயப்படுவார்கள். அதைத் தெய்வம் பொறுக்காது என்று உறுதியாக கம்பி வாழ்ந்தவர்கள் அவர்கள். ஊரிலுள்ள மக்களெல்லாம் அந்தக் குடும்பத். தாரிடம் வழக்கமாக நல்ல மதிப்பும் மரியாதையும் கொண் டிருந்தார்கள். அதனல்தான் ராமசாமிக்கு இன்று ஏற்பட்ட மானக் கேட்டைக் கண்டு அந்த ஊரார் அனைவரும் பரிதவித்தார் கள். மாட்டுப் பொங்கலன்ரு அவனுக்கு இப்படி நேர வேணும் என்று அங்கலாய்த்தார்கள். ராமசாமிக்கு வயது வந்து கலியாணமாகி அவன் தனிக் குடும்பம் ஆரம்பித்தபோது சொத்துப் பிரிவினையிலே அவனுக்குக் குடியிருக்க வசதியான வீடும் பத்து ஏக்கரா புன்செய் கிலமும் கிடைத்தன. ராமசாமி தனது மனைவி முத்தம்மாளோடு தனிக் குடித்தனம் கடத்தி வரலான்ை. ண்ேட காலமாக நிலைத்துவந்த குடும்ப கெளரவத்தை அவ அம் காப்பாற்றுவான் என்று எல்லோரும் நிச்சயமாக கம்பினர்கள். o v