பக்கம்:காவியக் கம்பன்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 3 காட்சி கொடுத்தவளை காற்றுக்கும் மழைக்கும் விட்டுக் கொடுத்து வீட்டில் இருப்பது ஆண்மையோ பக்தியோ என்ருெருமனம் கேட்கும். உணர்ச்சி வெள்ளமாயிற்று ஒடினன் மனைவி தடுத்தாள் மகனும் மறித்தான் தடம்தெரியாது தடுமாறிவிழுந்தும் எழுந்தும் ஆத்தாள் கோயிலிருந்த ஆற்றங்கரை சேர்ந்தான் படிப்படியா ய் வெள்ளம் படிக்கட்டேறிற்று. மண்டபத்துக்குள்ளும் வெள்ளம் பாய்ந்தது பதறிஞன் கம்பன் பதைத்தான் துடித்தான் சிறி வந்த வெள்ளத்தின் சீற்றத்தை மீறி செல்லக் குழந்தை போல் சிலையை அள்ளி எடுத்து மச்சுக்கு ஏறினன் மாடத்துக்குத் தாவினன் கோபுரத்தின் உச்சிக்கே கொண்டு சென்ருன் பெருகி வந்த வெள்ளம் மேலும் பெருகி கோபுரத்தைத் தொட்டது. குமுறின்ை is கம்பன் இதயம் துடித்தான். எரிமலையாக வெடித்தான். அன்னையே காவிரி, அடங்காப்பேய் ஆனயோ உயிர் வளர்த்த நீ, பயிர்வளர்த்த நீ அனைத்தும் பாழாக்கும் வெறி கொண்டா யோ பாவத்தைக் கழுவி புண்ணியத்தை அருளும் புனிதவதி என்னும் பொன்னிமகள் நீதானே?