பக்கம்:காவியப்பரிசு.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெட்டைக் கனவேபோல் நீயிருந்தாய். தில்லைவெளி யானாலும் திரைக்குப் பின் பார்ப்பதிலே எல்லைபற்ற பேராவல் எழும்பும் கதையே போல், எட்டாப் பழம்தின்ன, இறக்காத தேனிறக்க, கிட்டாத தூரத்துக் கிரகத்தின் ஒளிகாண மட்டற்ற பேரார்வம் வளரும் விதமே போல், உன்னை என் லட்சியமாய், - உள்ளத்து நாயகியாய், கன்னியெழிலுன்னைக் காதலித்தேன். இன்றைக்கோ- வற்ருப் பெருங்கனவாய் வளர்ந்துவந்த ஆசையெலாம். சிற்றின்ப சித்தியிலே செத்துக் கருகியதேன்? மண இரவே காதலுக்கு மறலியோ? ஆசை பிணமாவதும் குய் யப் .. பிலப்பா தலந்தானோ? சித்திக்கும் இன்பத்தில் சிறப்பிலையோ? சிக் காதல் எத்தித் திரிந்தலைந்து ஏச்சங்கள் காட்டுகின்ற