பக்கம்:காவியப்பரிசு.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைக்கோ, இன்றைக்கோ , என்றன் இதயத்தில் எத்தனையோ பசிகௗடி? அன்றைக்கென் புவிவாழ்வில் அறியாத அர்த்தமெலாம் - இன்றைக்கென் இதயத்துள் இனங்காட்டித் தோன்றுதடி? உன்றன் கருவிழியின் .. ஒளியன்றிப் பேருலகில் இன்றென் கதைகளுக்கு இலங்குதடி பல ஜோதி! உன்றன் உறவொன்றே உலகிலென்றன் - லட்சியமாய் நின்று நிலவியதோர் நிலை மாறி, இவ்வுலகில் இன்றெனக்கு எத்தனையோ இலட்சியங்கள் தோன்றுதடி! உன்றனையும் என்றனையும் உள்ளிட்ட இவ்வுலகில் தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் தொல்லைப் பழவினைபோல், தென்றலையும் தீயாக்கி, தேனினையும் விஷமாக்கி, மன்றல் மலரணையை மயானச் சிதையாக்கி, வென்றிநெடும் பாதையிலே வேல்முள்ளாய் வந்துறுத்திக் கன்றுவிடும் ஆசைகளைக் . கருக்கிப் பொடியாக்கி நின்று நிலவிவரும். நிட்டூாம் அத்தனையும்