இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கொன்றொழிக்கும் வேட்கையெனைக் குடிகொண்டு ஆட்டுதடி! உன்றன் ஒருத்திக்கே உரிமையென ஆக்கிவைத்த என்றன் இதயத்துள் இன்றிவ் வுலகமெலாம் சென்று குடி யே றியெனைச் சேவகனாய்க் கோருதடி! என்றாலும், என்றாலும்... இன்றைக்கும் உன்றனுக்கென் இதயத்தில் இடமுண்டு. என்றாலும், என்றாலும், அன்றைக்கென் இதயத்தில் அளித்திட்ட அவ்விடத்தை இன்றைக்கும் நீகோர இடமில்லை, இல்லையடி!