இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொன்னாசை மண்ணாசை காட்டிப் பார்த்தும் புலவன்வன் மயங்கிலனே! இனிமேல் நான்' என்னாதை காட்டுவதோ? இதனைக் கேட்பீர்! இளை ஞனவன் என்பதை நீர் எண்ணிப் பாரும், வச்சிரம்போல் மனவுறுதி பெறினும், அன்னாசி வாலிபன் தான் என்பதை நினைவு கூரும். கச்சணிந்த பெண்ணழகி ஒருத்தி காதல் கடைக்கண்ணில் கவிஞனவன் கவிழ்ந்தி டானோ? .. அமைச்சன் ; ஆம், அரசே! அதுவுமொரு வழிதான். வேங்க வன் : ஆமாம்! அதுவொன்றே இறுதிவழி. அதையும் பார்ப்போம்: காமினியை நீரறிவீர் அன்னே? அன்னாள் கவினழகை ஒருசிறிதே எண்ணிப் பாரும், வார்த்தெடுத்த பொற்சிலை போல் வடிவும், நல்ல . இலாலிட்பமும் நிறைந்தாளை, கலையால் நெஞ்சம் . . சர்த்துவிடும் திறத்தாளை, இசையில் கூத்தில் இணையில்லாக் காமினியை அனுப்பிப் பார்ப்போம். அமைச்சன் : அரசவையின் நர்த்தகியான் தனையோ ஆங்கே " அலுப்புதற்கு மனம் கொண்டீர்? நன்றி தாமோ?