பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மீனக் கொடியுடன் காணப் படுங்கலம் மேலேக் கடல்தனில் ஓடிவரும் மானப் புலிக்கொடி விற்கொடி ஏந்திய வங்கங்கள் தென்கடல் கூடிவரும் மெல்லிய நற்றுகில் பட்டுடை பொன்மணி மேவிப் பட்ர்தரு செம்பவழ வல்லியும் கல்லகில் ஆரமும் ஆதிய வாரிக் கொடுத்தது நம்புவியே ஆழ்கடற் சாவகம் புட்பகம் சீனமும் ஆதி யவனம் கடாரமுடன் ஈழம் முதலன தேயமெ லாமிவர் ஏகினர் தோணியில் வீரமுடன் இவ்வகை வாழ்ந்தனர் என்னின மாந்தர்கள் என்றதும் என்னுளம் பொங்கியதே அவ்வியல் தேய்ந்தனர் இன்றவர் என்றதும் ஆவென் றுயிர்த்துளம் மங்கியதே 36