பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை சென்றிடுவேன் அலுவல்-மனேயில் செய்வன செய்திடுவேன் ஒன்றும் மணியோசை-கேட்டு ஓடிடுவேன் அவள்பால் முன்றினில் நின்றிருப்பாள்-வாயின் முத்துக்கள் காட்டிடுவாள் கன்றிடத் தந்திடுவாள்-முத்தம் கணக்கில் அடங்காவே உடைகளே மாற்றிவிட்டுக்-காற்றில் உலவிடச் சென்றிடுவோம் கடைகளும் சென்றிடுவோம்-நல்ல கட்டுப்பூ வாங்கிடுவாள் நடைஎழில் காட்டி அவள்-அரும்பு நகைத்திடப் பால்கொணர்வாள் தடையொன்றும் இல்லாமல்-எனக்குத் தந்திடுவா ளின்பம்