பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பேசும் தெய்வம் [] சின்னஞ் சிறியதோர் வாய் திறந்து-மழலை சிந்துகையில் மன நோய்பறந்து பன்னரும் பேரின்பம் ஆகுதடா-சித்தர் பகர்ந்த வெலாமெங்கோ போகுதடா வாரி யணைத்ததைக் கொஞ்சுகையில்-முத்த மாரி வழங்கிடக் கெஞ்சுகையில் மீறி உதைத்திடு காலிரண்டும்-பத்தி மேவி வணங்கிடும் தாளிரண்டாம் வாகண்ணே என்றுகை நீட்டுகையில்-பொக்கை வாய்திறங் தன்பு சிரிக்குதடா சோகம் முதற்பகை மாய்ந்திடவே-அது சுட்டுப் பொசுக்கும்புன் மூரலடா 78