பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நீராட்டிப் பொட்டிட்டு மேனியிலே-நல்ல நீலப்பட் டாடையைச் சூட்டிச்சிறு தேரோட்டம் ஒட்டிகான் காட்டுகையில்-அது தெய்வத் திருநாளாய்த் தோன்றுதடா மோனத் துயில்கொள்ளும் போதினிலே-இமை முடிக் கிடக்குங்கண் மீதினிலே ஞானச் சுடரொளி வீசுதடா-தெய்வம் நண்ணிவங் தென்னெஞ்சிற் பேசுதடா கொண்டாடு வாரிடம் கூடிநிற்கும்-அன்பு கூர்ந்தவர் பாற்குடம் நாடிநிற்கும் சண்டாளர் நல்லவர் என்றறியா-நெஞ்சம் சார்ந்திடும் பிள்ளே என் தெய்வமடா 79