பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை இன்பத்தின் நிழல் == நல்லதோர் யாழினை பெற்றுவந்தேன்- அதை நானெடுத் தேஇசை மீட்டிநின்றேன் மெல்லிசை என்செவி பாய்கையிலே - அதில் மேவிய ஒர்நரம் பற்றதடா! செந்தமிழ்க் காவியம் செய்துவைத்தேன் - அதில் சிந்தனை யாவையும் பெய்து வைத்தேன் வந்தது வாழ்வென நம்பிநின்றேன் - அது மண்ணிற் புதைந்து சிதைந்ததடா! பச்சைப் பசுங்கிளி பாய்ந்துவந்தே - என்பால் பாச முடன் மொழி பேசியதே இச்சைஎலாம் அதில் வைத்திருந்தேன் - மனம் ஏங்கிடப் பூனையும் கவ்வியதே! கண்கவர் சிற்பமொன் ருக்கிவைத்தேன் - அதில் கற்பனை யாவையும் தேக்கிவைத்தேன் புண்பட என்மனம் ஆனதடா - அந்தப் பொற்சிலை பாழ்பட்டுப் போனதடா! 100