பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அத்தர் விற்போன் எடுப்பு அத்தர் விற்று வருவோனின் தொல்லை - அப்பப்பா அவன் கையில் அகப்பட்டார் தப்பிடுவதில்லை முடிப்பு பூசுவது நம்முடலில் ஒன்று - சின்ன போத்தலில் அடைத்துக் கொடுப்பது மற்ருென்று காசுவரும் படிஒன்றே நோக்கம் - குழைந்து கனியமிகப் பேசிடுவான் கண்டபலன் ஏக்கம் தடவுவான் மற்ருென்றெ டுத்தே - என்ன தடுத்தாலும் தாளிற்க ருட்டிக் கொடுத்தே தடவுவான் நம் தலையைப் பார்த்து - வேறு தப்பவழி இல்லையென நாமிருப்போம் வேர்த்து ஆரீவர் இப்பொருளைப் போலே - பூசும் ஆடைமணக் கும்.அடடா ஐந்தாறு நாளே பாரீசுச் சரக்கொன்றி ருக்கு - நல்ல பம்பாய்ச் சரக்கிங்கி லாந்துச்ச ரக்கு என்றுபல தேயத்தைச் சொல்வான் - நம்மை எப்படியும் வாய் திறக்க ஒட்டாமல் வெல்வான் ஒன்றேனும் உண்மையோ என்று - பார்த்தால் உள்ளூர்ச் சரக்கென்று தெரியுமே நன்று 116 -அத்தர் - அத்தர் -அத்தர் -அத்தர்