பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை விளம்பர உலகம் எடுப்பு விளம்பர உலகமடா - புகழ் விற்பனை நிலையமடா - இது முடிப்பு களம்பல கண்டவர் காளையர் எனினும் கறிக்குத வாதவர் என்றுரை துாற்றும் உளந்தனில் துணிவொரு சிறிதுளி யில்லா ஒருவனை உயர்பெரு வீரனென் றேத்தும் கூரிய அறிவொடு நேரியர் எனினும் கூளங்கள் போலவர் வாழ்வினைத் தேய்க்கும் சீரிய மதிசெயல் இல்லவன் ஆகினும் சீர்நலம் யாவையும் அவனிடஞ் சேர்க்கும் நெஞ்சினில் தேங்கிய சிந்தனை தந்திடும் நீள் புகழ்க் காவிய மாகினும் தாழ்த்தும் பிஞ்சுளம் யாவையும் நஞ்சென மாற்றிடும் பேதையர் தந்திடும் நூலினை வாழ்த்தும் 118 -விளம்பர -விளம்பர - விளம்பர -விளம்பர