பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை பேச்சில் முழுதுஞ் சொல்லிவிட்டாய் - வீணில் பெருமைகள் யாவும் அள்ளிவிட்டாய் பூச்சும் வேடமும் போட்டுநின்ருய செயலில் புன்மைகள் மட்டுமே காட்டுகின்ருய் வானில் நடந்தே முடித்துவிட்டாய் - அங்கே வண்ண நிலாவைப் பிடித்துவிட்டாய் ஏனை வியப்பும் நடத்திவிட்டாய் - ஆனல் ஏனே குணத்தைக் கெடுத்துவிட்டாய் அறிவின் எல்லை அறிந்துகொண்டாய் - இயற்கை ஆற்றலை எல்லாந் தெரிந்துகொண்டாய் உரிமை வாழ்வும் விரும்புகின்ருய் - மற்ருேர் உரிமையை மட்டுஞ் சுரண்டுகின்ருய் ஓரா யிரமுறை ஆடுகின் ருய் - கடவுள் ஒவ்வொன் றின்முனும் பாடுகின்ருய் மாரு இன்பந் தேடுகின்ருய் - ஆல்ை மனிதனை மட்டும் சாடுகின்ருய் மனிதனை மனிதன் விரும்பிவிட்டால் - நெஞ்சில் மானிட அன்பே அரும்பிவிட்டால் தனிமனி தன் மனந் திருந்திவிட்டால் - உலகம் சரிநிகர் சமமாய் உயருமடா -எதனை -எதனை -எதனை -எதனை -எதனை