பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ காவியப் பாவை உள்ளம் உருக்கிடும் ஒர்குரல்தான் - செவி உற்றதும் சட்டென நான் திரும் பக் கள்ளமில் லாஒரு ஏழைமகன் - பசி காட்டும் முகத்துடன் நின்றிருந்தான் கட்டுதற் கோர்துணி அற்றவனும் - கையில் காசு பணங்களும் அற்றவனும் திட்டி விரட்டினர் அன்னவனே - அவன் தேம்பிக் கிடப்பதைக் கண்டு நின்றேன் தங்க உடல்நலம் கொண்டவன்தான் - அவன் தங்க இடமின்றிச் சுற்றுகின்ருன் எங்கும் புறக்கணிப் பானதடா - சிங்க ஏறு வளங்குன்றிப் போனதடா! ஆவி உடல் வளம் அத்தனையும் - பெறும் ஆண்மகன் இப்படித் தேய்ந்திடவே பாவி மடம்படு மானிடர்கள் - நஞ்சு பாய்ச்சுதல் கண்டுளம் வெந்ததடா! செத்த மொழிக்கிங்கு சீர்வரிசை - ஒரு செ: மை பெருமொழிக் கேற்றமிங்கே பெற்ற மொழிக்கொரு காவலில்லை - என்ற பெற்றியை நெஞ்சம் நினைந்த தடா! \ × 23