பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கன்னடத் தான் துளுவன் - மலையன் கண்டு மொழித் தெலுங்கன் என்னுமிந் நால் வருக்கும் - அவரை ஈந்து மணம் முடித்தாள் பெண்ணெடுத் தே மகிழ்ந்தோர் - என்னைப் பெற்றவ ளைப் பகைத்தார் நன்னடைப் போக் கிழந்தார் - அந்த நால்வரும் நன் றிகொன்ருர் ஈன்றெனக் காத் தவளை - மனமே எங்கனம் நான் புகழ்வேன் சான்றவர் மெச் சிடவே - முப்பால் தந்து வளர்த் தனள்தாய் தோன்றுசங் கப் புலவர் - படைத்த தொட்டிலில் ஆட் டினவள் மூன்றா சர் கதைகள் - சொல்லி மூள்வலி யூட் டினள் தாய் என்றன் வய துநிலை - பருவம் ஏற்பவை தான் உணர்ந்தே நன்றறி வுக் கதைகள் - நகை நாட்டும் பிற கதைகள் ஒன்றிய வீ ரமுடன் - காதல் ஊட்டுஞ் சுவைக் கதைகள் மின்றளிர் மே னியினுள் - சொல்லி மேன்மை யுறப் பணித்தாள் 30.