பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வெல்லமும் சர்க்கரையும் - தந்தால் வேதனை தீர்ந்திடுமோ? சொல்லவுங் கைக்குதம்மா - அந்தச் சூரண மாத்திரைகள்! கையினிற் சீழிருந்தால் - நல்ல கத்தியி னுலறுப்பான் மெய்யினில் புண்படுமே - என்ருல் மேனி நலம்பெறுமோ? - சாதிச் சழக்குகளும் பொய்மைச் சாத்திரக் குப்பைகளும் மோதிப் பகைக்குணத்தால் - சண்டை மூண்டு மலிந்ததுவே மூட மதிச்செயலால் - மாந்தர் மொய்ம்பு சிதைந்தனரே! நாடு நலிந்ததுவே - மன்பதை நாற்றம் மிகுந்ததுவே! இச்சமு தாயமதை - மாற்றி ஏற்றங் கொடுப்பதென்ருல் எச்செயல் ஏற்றதுவோ - நன்றே எண்ணித் துணிந்திடுவீர்! உற்ற புரட்சியில்ை - அன்றி ஒர்நலம் கூடிடுமோ? மற்றவர் புண்படுவார் - என்ருல் மன்பதை சீர்பெறுமோ? }: 89