பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 சிந்தாமணியின் சிறப்பு - சிந்தாமணி ஐம்பெருங்காவியங்களுள் ஒன்ருகும். அது சமண்சமய உண்மைகளே விளக்கும் உயர்ந்த அழகிய நூல். சீவகன் என்பானுடைய வரலாற்றைச் சித்திரிப்பது. அவன் தனது அறிவும் திறனும் காரண மாகப் பல மகளிரை மணந்து இன்புற்ற வரலாற்றை விளக்குவது. அதனால் மணநூல் என்றே பெயர் பெற்று விளங்குவது அக் நூல். அது பத்தாம் நூற்ருண்டில் எழுந்த பைந்தமிழ்க் காவியம். திருத்தக்க தேவர் என் னும் பெருந்தமிழ்ப் புலவர் சொல்லழகும் பொருள் நுட்பமும் பொருந்த விருத்தப்பாவால் ஆக்கிய அருங் தமிழ் நூல். அந் நூலின் இனிமையை உணர்ந்த அநபாயன் எப்பொழுதும் அதனேயே கற்பதும் பிறர் சொல்லக் கேட்பதுமாகிய செயலில் ஈடுபட்டிருந்தான். அதயாயனுக்கு அமைச்சர் அறிவுரை அநபாயன் கொண்ட சிந்தாமணிப் பற்றினைச் சேக்கிழார் தெரிந்தார். சமணப் பெருங்காவியமாகிய அதனேக் கற்பதாலும் கேட்பதாலும் அரசனது சைவப் பற்றுக் குறைதலுங் கூடும் என்று சேக்கிழாக் எண்ணினர். அறிகொன்(று) அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன்." என்று தெய்வப்புலவர் வகுத்தருளிய அமைச்சனது கடமையை அவர் கன்கு உணர்ந்தவர். ஆதலின் ஒரு நாள் அரசனே அணுகி, சைவம் தழைக்க வந்த தமிழ்ப் பேரரசே சிந்தாமணி சிறந்த காவியமேயாயினும் தங். களைப் போன்ற அரசன் ஒருவனது வரலாற்றை விரித் துரைப்பதுதானே! அதனைக் கற்பதால் இம்மைக்கோ ہسچ கா. மூ.- !