100 வேண்டும் உதவிகளைச் செய்ய உடன் சென்றனர். அரசன் ஆணைப்படி அவருக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் எடுத்துக்கொண்டு பணியாளர் பலர் பின் தொடர்ந்தனர். எல்லோரும் தில்லேயை அடைந்து சேக்கிழார் தங்குதற்கென அமைத்த தனி மாளிகையில் புகுந்தனர். சேக்கிழார் காவியத் திருப்பணி சேக்கிழார், தொண்டர் காவியத்தைப் பாடத் தொடங்குதற்குத் துரிய நாள் ஒன்றைக் குறித்தார். அன்று அவர் காலேயில் நீராடி வெண்ணிறு அணிந்து, மாலையாகப் புனேந்து சிவக்கண்மணி தரித்துக் கூத்தப் பெருமான் திருக்கோவிலே அடைந்தார். தில்லைப் பொன்னம்பலத்தை மும்முறை வலம்வந்து பெருமான் திருவடி இறைஞ்சிப் போற்றினர். பெருமானே ! தொண்டர்தம் பெருமை சொல்லவும் படுமோ அறி. தற்கு அரியதும் அளவிடற்கு அரியதுமான அடியார் பெருமையை அடியேன் எங்ஙனம் சொல்ல வல்லேன் ? கின் திருவருள்துணையின்றி எளியேல்ை யாதும் இயற்ற முடியாது,' என்று உள்ளமும் ஊனும் ஒருங்கு உருகப் பெருமானிடத்து முறையிட்டார். அப்போது உல கெலாம் என்ற திருவாக்கு அங்கு கின்ருர் அனைவரும் கேட்க வானில் எழுந்தது. - அவ்வாறு இறைவன் எடுத்துக்கொடுத்த உல கெலாம் என்ற மங்கலத் தொடரையே முதலாகக் கொண்டு காவியத்தைப் பாடத் தொடங்கினர். சில காலத்தில் தொண்டர் புராணமாகிய தண்டமிழ்க் காவியம் நிறைவுற்றது. இக் காலத்தில் அரசன் அருபாயன் சேக்கிழார் தில்லையில் தங்கிச் செய்துவரும் காவியப்
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/108
Appearance