உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தில் படைப்புக் காலக்தொட்டு மேம் பட்டு வந்த பழங்குடி மக்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாராட்டிப் பாடிய பாக்கள் பலவற்றைச் சங்கத் தொகைநூல்களில் காணலாம். குறுநில மன்னர்களின் சிறப்பைக் குறிப்பிடும் பாக்களே யும் பார்க்கலாம். இரவலர்க்கு வரையாது வழங்கிய வள்ளல்களின் வண்மையை வகுத்துரைக்கும் பாக்களே பும் நோக்கலாம். தமிழ்நாட்டு மன்னர்களின் தங்கிக ரில்லாத வீரத்தையும் மறவர்களின் போர்த்திறனையும் புகழ்ந்துரைக்கும் கவிதைகளையும் காணலாம். கருத் தொருமித்த காதலர் வாழ்க்கையில் கானும் இன்ப நிகழ்ச்சிகளே விளக்கும் இனிய பாடல்களையும் பார்க்கலாம். இங்ங்ணம் மன்னர், மறவர், புலவர், செல்வர், வள்ளியோர், காதலர் முதலாயினருடைய வாழ்வில் நிகழ்ந்த சுவையான பகுதிகளைத் தனித்தனியே எடுத் துரைக்கும் இனிய பாடல்களேயே எல்லா நூல்களினும் காணலாம். சிறப்புடைய ஒருவரது பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தை பும் தொடர்பாக வகுத்துரைக்கும் சங்கத் தமிழ்நூல் ஒன்றேனும் கண்டோமில்லை. பாரதம் பாடிய பெருங் தேவனுர் என்று பாராட்டப்பெறும் பழந்தமிழ்ப் புலவர் பாரத வரலாற்றை வெண்பா யாப்பால் விரித் துரைத்தார் என்பர். அந்நூல் இக்நாளில் முழுகி டி. வுடன் காணப்பெறவில்லே. ஒருசில பாக்களே ஆங் காங்கு உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத் தாளப்பட்டுள்ளன. ஆகவே கி. பி. இரண்டாம் நூற்ருண்டிற்கு முன்னர் ஒரு பொருள்பற்றிய தொடர்