பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 சேக்கிழாரை வேண்டினர். அவ் அரங்கேற்ற விழாவிற்கு காட்டிலுள்ள பெருமன்னர்களும் குறுநில மன்னர் களும் பெருஞ்செல்வர்களும் அரசியல் அலுவலர்களும் தில்லையில் வந்து திரண்டனர். அநபாயன் விழாவைக் காணவருவார் யாவர்க்கும் வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தான். தில்லைக் கூத்தப்பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பொடு பூசனை நடக்குமாறு பணித் தான். திருக்கோவில் ஆயிரக்கால் மண்டபத்தில் சிவ பத்தி மிக்க செந்தமிழ்ப் பெருவேந்தனுகிய அநபாயன் திருமுன்பு சேக்கிழார் பெருமான் தமது காவியத்தை வாசித்துப் பொருள் விரித்துரைக்கத் தொடங்கினர். அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் அரங் கேற்றம் நிறைவுற்றது. தொண்டர்புராண அரங்கேற் றம் நடைபெற்ற ஒராண்டுக் காலமும் தில்லைத் திருங்க ரம் தேவகயிலாயமாகத் திகழ்ந்தது. நாள்தோறும் பல் லாயிரக் கணக்கான் மக்கள் திரண்டிருந்து தெய்வத் தொண்டர் திருச்சரிதங்களே உளமுருகக் கேட்டு உவகையுற்றனர். சேக்கிழாருக்குச் சிறப்புச் செய்தல் திருத்தொண்டர்புராணம் அரங்கேறியவுடன் மன் னன் அனபாயன் அடைந்த மகிழ்ச்சிக்கு ஒர் எல்லே யில்லை. சேக்கிழார் பெருமானுக்குத் தக்க சிறப்புக்கள் செய்யப் பேராவல் கொண்டான். தில்லைக்கூத்தன் திரு முன்பு பசும்பட்டால் அணிசெய்த அறுகாற் பீடத்தில் புராணத்தை ஏற்றினன். அதனைத் தில்லைவாழந்தணர் கள் சிவமூல மந்திரத்தால் பூசித்தார்கள். அதன் பின் அதனேப் பொற்பேழையில் வைத்து, அரசன் தனது பட்டவர்த்தனக் களிற்றின் தலைமேல் எழுந்தருளச் செய்தான். சேக்கிழார் பெருமானையும் அவ்யானையின்